தரைக்காற்று, கோடை மழை பெய்வதால் சென்னையில் வெப்பம் குறைந்து விட்டது: வானிலை மையம் || wind summer rain chennai heat down weather report
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
தரைக்காற்று, கோடை மழை பெய்வதால் சென்னையில் வெப்பம் குறைந்து விட்டது: வானிலை மையம்
தரைக்காற்று, கோடை மழை பெய்வதால் சென்னையில் வெப்பம் குறைந்து விட்டது: வானிலை மையம்
சென்னை, ஜூன் 10-

சென்னையில் கடந்த 1 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெப்பம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 37.1 டிகிரி செல்சியஸ் (98.8 டிகிரி) வெப்பம் பதிவாகியது.

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய இடங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, ஊட்டி உள்பட பல ஊர்களில் சாரல் மழை பெய்கிறது. இதனால் தென் மாநிலங்களில் வெப்பம் குறைந்துவிட்டது.

சென்னை, வேலூர், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மாலை நேரங்களில் அவ்வப்போது சில பகுதிகளில் மழை பெய்கிறது. இரவில் தரைக்காற்றும் வீசுவதால் வட தமிழகத்திலும் வெப்பம் குறைந்துவிட்டது. இனி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இருக்காது.

சென்னையை பொருத்தவரை மேகமூட்டம் உருவாகும். இரவில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யவும் வாய்ப்பு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif