இன்று பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டி: புதிய வரலாறு படைப்பது ஜோகோவிக்கா? நடலா? || today french open final nadal jokovic history
Logo
சென்னை 03-06-2015 (புதன்கிழமை)
இன்று பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டி: புதிய வரலாறு படைப்பது ஜோகோவிக்கா? நடலா?
இன்று பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டி: புதிய வரலாறு படைப்பது ஜோகோவிக்கா? நடலா?
பாரிஸ், ஜூன். 10-

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடக்கிறது. இதில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் டிஜோகோவிக் (செர்பியா)- இரண்டாம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) மோதுகிறார்கள். இந்த இறுதிப்போட்டி வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.

ஏனென்றால் யார் வெற்றி பெற்றாலும் அது சாதனையாகவே இருக்கும். ஜோகோவிக் கடந்த ஆண்டு விம்பிள்டன், அமெரிக்க ஓபன், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய கிராண்ட்சிலாம் பட்டங்களை பெற்றார். தற்போது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தையும் வென்றால் தொடர்ந்து 4 கிராண்ட்சிலாம் பட்டத்தையும் 3 ஆண்டுகளுக்கு பிறகு பெற்ற வீரர் என்ற பெருமையை ஜோகோவிக் பெறுவார்.

கடைசியாக 1967-ம் ஆண்டு ராட்லாவர் தொடர்ந்து 43 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்று இருந்தார். ஜோகோவிக் கடந்த 3 கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டியிலும் நடாலையே வீழ்த்தி இருந்தார். இதனால் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார். இதுவரை 5 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற அவர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை முதல் முறையாக வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

ஆனால் களிமண் தரையில் விளையாடுவதில் நடால் சிறந்தவர். அவர் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 6 முறை (2005, 2006, 2007, 2008, 2010, 2011) வென்று உள்ளார். 7-வது முறையாக வென்றால் சாதனையாகும். இதுவரை எந்த ஒரு வீரரும் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 7 முறை வென்றது இல்லை. பிஜோரன் போர்க் அதிக பட்சமாக 6 முறை பட்டம் வென்று உள்ளார்.

நடால் கடந்த 3 கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டியில் ஜோகோவிக்கிடம் தோற்று இருந்ததால் இந்த முறையாவது அதற்கு பதிலடி கொடுப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஞ்ச் ஓபனில் அவர் இதுவரை 52 ஆட்டத்தில் விளையாடி ஒரே ஆட்டத்தில் மட்டுமே (2009-ம் ஆண்டு, 4-வது சுற்று) தோற்று உள்ளார். இருவரும் 32 ஆட்டத்தில் மோதியுள்ளனர். இதில் நடால் 18 ஆட்டத்திலும், ஜோகோவிக் 14 ஆட்டத்திலும் வென்று உள்ளனர். கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டியில் ஜோகோவிக் 3 முறை வென்றுள்ளார்.

ஆனால் நடால் ஒரு முறைதான் வென்றார். பிரெஞ்ச் ஓபன் போட்டியில் இருவரும் மோதிய 3 ஆட்டத்திலும் நடாலே வெற்றி பெற்று உள்ளார். பெண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் மரியா ஷரபோவா (ரஷியா) 6-3, 6-2 என்ற கணக்கில் சாரா எர்ராணியை (இத்தாலி) வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் 4 கிராண்ட்சிலாம் பட்டத்தையும் வென்ற 10-வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

உலக கோப்பை ஜூனியர் கால்பந்து: 2-வது சுற்றுக்கு அமெரிக்கா முன்னேற்றம்

20-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (20 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ....»