தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா || Saina Nehwal reach to Thailand Open final
Logo
சென்னை 20-04-2015 (திங்கட்கிழமை)
தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா
தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா
பாங்காக், ஜூன். 9 -
 
தாய்லாந்தில் நடைபெற்று வரும் கிராண்ட்பிரிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் கால் இறுதிப் போட்டி நேற்று நடந்தது.
 
இந்த போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தாய்லாந்து வீராங்கனை சப்சிரீயை எதிர்கொண்டார். போட்டியின் முடிவில் 21-10, 22-20 என்ற நேர் செட்களில் சப்சிரீயை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
 
அரையிறுதியில் அவர் தாய்லாந்து வீராங்கனை போன்டிப்பை எதிர்கொண்டார். 24-22, 21-11 என்ற நேர் செட்களில் போன்டிப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.  
 
இறுதிப் போட்டியில் மற்றொரு தாய்லாந்து வீராங்கனையான ரச்சநோக் இந்தனோன் என்பவரை சாய்னா எதிர்கொள்கிறார். ரச்சநோக் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது வங்காளதேசம்

பாகிஸ்தான்-வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. இதில் ....»