ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்ல: காங்கிரஸ் || indian president candidate congress statement
Logo
சென்னை 27-03-2015 (வெள்ளிக்கிழமை)
ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்ல: காங்கிரஸ்
ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்ல: காங்கிரஸ்
புதுடெல்லி, ஜூன் 9-

ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதைத் தொடர்ந்து, இப்பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிரணாப் முகர்ஜியிடம் இன்று காலை கொல்கத்தாவில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஜனாதிபதி பதவிக்கு உங்களை வேட்பாளராக அறிவிக்கப் போகிறார்களாமே? என்று அவர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்துக் கூறுகையில், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சிதான் முடிவு செய்யும். கட்சிதான் அந்த அறிவிப்பை வெளியிடும். ஒருவர் தன்னிச்சையாக விருப்பப்படுவதால் ஜனாதிபதி ஆகிவிட முடியாது என்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், பொதுச் செயலாளருமான ஜனார்த்தன் திவேதி, டெல்லியில் இன்று வெளியிட்ட அறிக்கையில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக எங்கள் கூட்டணி கட்சிகளுடனும், அரசுக்கு ஆதரவு தரும் கட்சிகளுடனும் விவாதம் நடந்து வருகிறது. அப்பதவிக்கு இதுவரை யாருடைய பெயரும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க ஜனார்த்தன் திவேதி மறுத்து விட்டார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

அமெரிக்காவில் 13 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் தம்பி பலி: அண்ணன் படுகாயம்

புளோரிடா, மார்ச். 27–அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஹுஸ்டன் நகரில் 13 வயது சிறுவன் தனது வீட்டில் ....»