டீசல் விலை உயர்த்தப்படமாட்டாது: பெட்ரோல் விலை மேலும் குறைகிறது பிரணாப்முகர்ஜி சூசக தகவல் || petrol price again decrease pranab mukherjee
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
டீசல் விலை உயர்த்தப்படமாட்டாது: பெட்ரோல் விலை மேலும் குறைகிறது- பிரணாப்முகர்ஜி சூசக தகவல்
டீசல் விலை உயர்த்தப்படமாட்டாது:
 பெட்ரோல் விலை மேலும் குறைகிறது- பிரணாப்முகர்ஜி சூசக தகவல்
புதுடெல்லி, ஜூன்.9-

பெட்ரோல் விலை கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.7.20 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெட்ரோல் விலையை குறைக்கக்கோரி பாரதீய ஜனதா கூட்டணி சார்பில நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பிலும் திருப்தி அடையாத பல்வேறு கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. இதனால் பெட்ரோல் விலையை மேலும் குறைப்பது பற்றி எண்ணை நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.

இந்த நிலையில் பெட்ரோல் விலை மேலும் குறைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான தகவலை மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி நேற்று வெளியிட்டார். இது தொடர்பாக நேற்று அவர் டெல்லியில் நிருபர்களிடம் பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

அதிர்ஷ்டவசமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கணிசமாக குறைந்து கொண்டிருக்கிறது. எனவே பெட்ரோல் விலை மேலும் குறைவதை எதிர் பார்க்கலாம்.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட சில நாட்களில் சமையல் கியாஸ், டீசல் விலைகளும் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. ஜூன் மாத தொடக்கத்தில் மத்திய மந்திரிகள் குழு கூடி இது தொடர்பாக முடிவு எடுப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்து வருவதால், டீசல் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடி குறைந்துள்ளது.

இதுபற்றி மத்திய பெட்ரோலியம் இலாகா மந்திரி ஜெய்பால் ரெட்டி கூறுகையில், டீசல் விலை உயர்வு இப்போதைக்கு இல்லை என்றார்.

பெட்ரோல் விலையை மேலும் குறைத்து, டீசல் விலையை உயர்த்தாமல் இருப்பதன் மூலம் மக்களிடம் மத்திய அரசு பற்றி நல்ல மனநிலையை ஏற்படுத்த முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நம்புகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

விஜய் கட்–அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர் தவறி விழுந்து பலி

திருவனந்தபுரம், அக். 23–நடிகர் விஜய் நடித்த கத்தி படம் தமிழகம் முழுவதும் நேற்று ரிலீசானது.இதுபோல கேரளாவிலும் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif