பல கோடி ரூபாய் பணம் செலுத்தியும் தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்காதது ஏன்?: நீதிமன்றம் கேள்வி || money pay tamilnadu power court
Logo
சென்னை 31-07-2014 (வியாழக்கிழமை)
  • மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை லலிதாவுக்கு வெள்ளி
  • லிபியாவின் முன்னாள் துணை பிரதமர் கடத்தல்
  • காமன்வெல்த்: ஹாக்கி காலிறுதியில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து வெளியேறியது இந்தியா
  • சகரான்பூர் கலவரத்துக்கு காரணமான 6 முக்கிய குற்றவாளிகள் கைது
  • இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,321 ஆக உயர்வு
பல கோடி ரூபாய் பணம் செலுத்தியும் தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்காதது ஏன்?: நீதிமன்றம் கேள்வி
பல கோடி ரூபாய் பணம் செலுத்தியும் தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்காதது ஏன்?: நீதிமன்றம் கேள்வி
மதுரை,ஜூன்.8-
 
பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டு வருவதில் நிலவும் சிக்கல்கள் பற்றி விளக்கம் கேட்டு, ஸ்டாலின் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
 
அவரது மனுவை ஏற்று விசாரணை நடத்திய நீதிபதி, மின்சாரம் கொண்டு வருவதில் நிலவும் சிக்கல்கள் பற்றி விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பல கோடி பணம் செலுத்தியும் தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்காதது ஏன்? எனவும், மின்சாரம் பெறுவதற்காக பிற மாநிலங்களுக்கு தமிழகம் எவ்வளவு பணம் செலுத்தியுள்ளது? எனவும் தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
குஜராத், ஜார்க்கண்ட் மாநிலங்கலிலிருந்து மின்சாரம் பெற தமிழகம் பல கோடி பணம் செலுத்தியுள்ளதாகவும், ஆனால் மின்சாரம் கொண்டு வரும் பாதையிலுள்ள இடர்பாடுகளால் தமிழகத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மதுரை