இலவச பொருட்கள் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்: அரக்கோணத்தில் டாக்டர் ராமதாஸ் ஆவேசம் || free gifts public arakkonam ramadoss
Logo
சென்னை 01-03-2015 (ஞாயிற்றுக்கிழமை)
இலவச பொருட்கள் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்: அரக்கோணத்தில் டாக்டர் ராமதாஸ் ஆவேசம்
இலவச பொருட்கள் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்: அரக்கோணத்தில் டாக்டர் ராமதாஸ் ஆவேசம்
அரக்கோணம், ஜூன்.8-
 
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னியர் பட்டதாரி இளைஞர்கள் கலந்தாய்வு கூட்டம் அரக்கோணத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
 
கூட்டத்திற்கு பட்டதாரி சங்க செயலாளர் சு.கலைஞ்சழியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
2016-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை நோக்கி பா.ம.க. வன்னியர் இளம் பட்டதாரிகள் சங்கம் அமைத்து அதன் மூலம் ஒவ்வொரு கிராமமாக 50 இளம் பட்டதாரிகளை கட்சியில் சேர்க்க வேண்டும்.
 
தமிழகத்தில் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும்போது விஞ்ஞானம் சம்பந்தமான கல்வி, வணிக மேலாண்மை கல்வி சாதா ரண ஏழை மக்களுக்கு கிடைக்கும் வகையில் கல்வியில் பெரும் புரட்சி ஏற்படுத்த வேண்டும்.
 
தமிழகத்தில் ஆளும் கட்சியும், ஏற்கனவே ஆண்ட கட்சியும் மக்களை ஏமாற்றுவதற்காக இலவசங்களை கொடுத்து பிச்சைக்காரர்களாக மாற்றி வருகிறார்கள். இந்த நிலைமை மாறவேண்டும்.  
 
அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பூட்டு போட்டு மூடும் போராட்டம் நடத்த உள்ளோம். செப்டம்பர் மாதம் 17-ந் தேதி வன்னியர்களுக்கு தனிஇட ஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளோம்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
கூட்டத்திற்கு பட்டதாரி சங்க செயலாளர் சு.கலைஞ்சழியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-  
 
2016-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை நோக்கி பா.ம.க. வன்னியர் இளம் பட்டதாரிகள் சங்கம் அமைத்து அதன் மூலம் ஒவ்வொரு கிராமமாக 50 இளம் பட்டதாரிகளை கட்சியில் சேர்க்க வேண்டும்.
 
தமிழகத்தில் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும்போது விஞ்ஞானம் சம்பந்தமான கல்வி, வணிக மேலாண்மை கல்வி சாதாரண ஏழை மக்களுக்கு கிடைக்கும் வகையில் கல்வியில் பெரும் புரட்சி ஏற்படுத்த வேண்டும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - வேலூர்

amarprakash160600.gif
amarprakash160600.gif