சனி, ஞாயிறு விடுமுறை கேட்டு வேலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்: 120 பெண்கள் கைது || saturday sunday holiday vellore anganwadi workers strike
Logo
சென்னை 15-02-2016 (திங்கட்கிழமை)
சனி, ஞாயிறு விடுமுறை கேட்டு வேலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்: 120 பெண்கள் கைது
சனி, ஞாயிறு விடுமுறை  கேட்டு வேலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்: 120 பெண்கள் கைது
வேலூர், ஜூன். 8-  
 
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று மறியல் செய்தனர். மாவட்ட துணை தலைவர் ரோசி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் காசிநாதன் தொடங்கி வைத்தார்.  
 
மாநில செயலாளர் சுதா, குப்பு, கீதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சனி, ஞாயிறு விடுமுறையை பறிக்கும் அரசு ஆணையை வாபஸ் பெற வேண்டும். சனி, ஞாயிறு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி மறியலில் ஈடுபட்டனர்.  
 
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்துவாச்சாரி போலீசார் மறியல் செய்த 120 பெண் ஊழியர்களை கைது செய்தனர். அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மறியலால் சத்துவாச்சாரியில் பரபரப்பு ஏற்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - வேலூர்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif