பட்டுக்கோட்டையில் விபத்தில் வியாபாரி பலி || pattukottai accident merchant dead
Logo
சென்னை 21-10-2014 (செவ்வாய்க்கிழமை)
  • நெல்லை, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவில் எதிரில் உள்ள துணிக்கடையில் தீவிபத்து
  • அரியானா புதிய முதல்-மந்திரி இன்று தேர்வு
பட்டுக்கோட்டையில் விபத்தில் வியாபாரி பலி
பட்டுக்கோட்டையில் விபத்தில் வியாபாரி பலி
பட்டுக்கோட்டை, ஜுன்.7-
 
பட்டுக்கோட்டை அல்லாக் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (40). வெங்காய வியாபாரி. பட்டுக்கோட்டை மார்க்கெட்டில் மொத்தமாக வாங்கி புறநகர் பகுதிகளில் சில்லரைக்கு விற்பனை செய்து வந்தார்.
 
இன்று அதிகாலை முருகன் பட்டுக்கோட்டை கண்டியன் தெரு மதுக்கூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார். இதனை பார்த்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான முருகனுக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தஞ்சாவூர்

section1

டெல்டா மாவட்டங்களில் 5–வது நாளாக தொடர் மழை

தஞ்சாவூர்,அக்.21–வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif