தஞ்சையில் பரபரப்பு: காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பட்டதாரி மாணவி தற்கொலை || boy friend problem girl suicide tanjore
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
தஞ்சையில் பரபரப்பு: காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பட்டதாரி மாணவி தற்கொலை
தஞ்சையில் பரபரப்பு: காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பட்டதாரி மாணவி தற்கொலை
தஞ்சாவூர்,ஜூன்.4-

தஞ்சை அன்புநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி குமுதவள்ளி. இவர்களது மகள் ராஜேஸ்வரி(வயது24). எம்.பி.ஏ.பட்டதாரி. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மணி இறந்துவிட்டார்.

குமுதவள்ளி வீட்டுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் சகாபுதீன் என்பவர் சிறுவயதில் இருந்தே பழகி சென்று வந்தார். இதனால் ராஜேஸ்வரிக்கும் ,சகாபுதீனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன் தினம் குமுத வள்ளி தனது மகள் ராஜேஸ்வரியை அழைத்து ஜெயங்கொண்டத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு சென்றார். அப்போது திருமண மண்டபத்தில் வைத்து , ராஜேஸ்வரி, தஞ்சைக்கு செல்வதாக தாய் குமுதவள்ளியிடம் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

பின்னர் வீட்டுக்கு வந்த ராஜேஸ்வரி, செல்போனில் காதலன் சகாபுதீனுடன் பேசினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் சகாபுதீன் , ராஜேஸ்வரியை கண்டித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி , வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் கருகி படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காதலனுடன் ஏற்பட்ட தகராறில்,பட்டதாரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தஞ்சாவூர்

section1

20 முக்கிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் மகாமக குளத்தில் சேர்க்கப்பட்டது

கும்பகோணம் மகாமக விழா இன்று(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றம் முடிந்ததும் பக்தர்கள் மகாமக குளத்தில் புனித ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif