தேம்ஸ் நதியில் நடக்கும் வைரவிழாவில் ராணி எலிசபெத் பங்கேற்பு: லண்டனில் கோலாகலம் || Queen Elizabeth joins giant jubilee flotilla in London
Logo
சென்னை 30-05-2015 (சனிக்கிழமை)
தேம்ஸ் நதியில் நடக்கும் வைரவிழாவில் ராணி எலிசபெத் பங்கேற்பு: லண்டனில் கோலாகலம்
தேம்ஸ் நதியில் நடக்கும் வைரவிழாவில் ராணி எலிசபெத் பங்கேற்பு: லண்டனில் கோலாகலம்
லண்டன்,ஜூன்.3- 


ராணி எலிசபெத் இங்கிலாந்து அரசியாக முடிசூட்டிக் கொண்டு 60-வது ஆண்டை எட்டியுள்ளதையொட்டி லண்டனில் 4 நாட்கள் வைரவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக ராணி எலிசபெத் வெள்ளை மற்றும் வெள்ளி நிற ஆடை அணிந்து லண்டனின் தேம்ஸ் நதி வந்தடைந்தார்.  

 இவ்விழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் சிவப்பு, வெள்ளை, மற்றும் நீல நிற ஆடை அணிந்து தேம்ஸ் நதிக்கரையில் 11 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்றனர். திரண்டிருந்த மக்களைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் புன்னகைத்த ராணி கூட்டத்தினரைக் கடந்து சென்று அரச தெப்பத்தில் ஏறினார். ராணியுடன் 90 வயதான அவரது கணவர் பிலிப்பும் உடன் வந்திருந்தார். இளவரசர் வில்லியம் தனது புது மனைவி கேத்-உடன் வந்திருந்தார்.   

தற்போது 86 வயதாகும் எலிசபெத் ராணி, விக்டோரியா மகாராணிக்குப் பின்னர் ஆட்சியில் 60 ஆண்டுகள் நிறைவு செய்த பெருமையைப் பெற்றுள்ளார். ஓய்வுபெற்ற போர்க்கப்பல்கள், போட்டிப் படகுகள், மிதகுகள், ஓடங்கள் போன்றவை வைரவிழாவில் அணிவகுத்துள்ளன. 

இங்கிலாந்து மட்டுமின்றி ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து போன்ற நாடுகளின் தெருக்களிலும் பிரம்மாண்ட விழாக்களும், விருந்துகளும் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. தேம்ஸ் நதியின் மையத்தில் அமைக்கப்பட்ட மேடையில், தங்க இருக்கையில் ராணி அமர்ந்துள்ளார். பிரதமர் டேவிட் கேமரூன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். இங்கிலாந்து முழுவதும் விழாக்கோலம் பூண்டிருப்பதோடு, தெருக்களில் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரிக்கின்றனர்.  

விழாவின் தொடர்ச்சியாக நாளை ராணியின் லண்டன் இல்லமான பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே பிரம்மாண்ட பாப் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை ராணி, புனித பால் தேவாலயத்திற்கு ஊர்வலமாக வருகிறார். இறுதியாக புனித பால் தேவாலயத்தில் வைத்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியோடு விழா நிறைவு பெறுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பாகிஸ்தானில் வான்வழி தாக்குதலுக்கு அமெரிக்கர்கள் ஆதரவு

பாகிஸ்தானின் வடமேற்கே ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதிகளில் தலீபான் தீவிரவாதிகள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றனர். அந்த ....»

MM-TRC-Set2-B.gif