நைஜீரியா: சர்ச்சில் குண்டு வெடித்து 14 பேர் பலி || Bomb Blast in a Church of Nigeria kills 14 lives
Logo
சென்னை 30-01-2015 (வெள்ளிக்கிழமை)
  • இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம் : டெல்லியில் இன்று ஆலோசனை
  • முத்தரப்பு கிரிக்கெட்: இன்று இந்தியா-இங்கிலாந்து மோதல்
  • சென்னை: பூரண மதுவிலக்கை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார் சசி பெருமாள்
நைஜீரியா: சர்ச்சில் குண்டு வெடித்து 14 பேர் பலி
நைஜீரியா: சர்ச்சில் குண்டு வெடித்து 14 பேர் பலி
அபுஜா,ஜூன்.3-


ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பவுச்சி மாநிலத்திலுள்ள சர்ச் ஒன்றில் இன்று நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தின்போது சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காவிட்டாலும், போகோ ஹரம் என்னும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம்தான் இத்தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஏனெனில் போகோ ஹரம் இயக்கத்தினர்தான் நைஜீரியாவில் பொது இடங்களிலும், சர்ச்களிலும் சமீபகாலமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. தனி இஸ்லாமிய மாநிலம் கோரி இவ்வியக்கத்தினர் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். தனி மாநிலம் ஏற்படுத்தித் தராத காரணத்துக்காக பல அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் மத தலைவர்களை போகோ ஹரம் இயக்கத்தினர் கொன்றுள்ளனர்.

மொத்தம் 160 மில்லியன் மக்கள் வாழும் நைஜீரியாவின் வடபகுதியில் முஸ்லிம்களும், தென்பகுதியில் கிறிஸ்தவர்களும் அதிகமாக வாழ்ந்து வருவதால், அவர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை

சைபர் உலகத்துக்குள் நேரடியாக காலடி எடுத்து வைக்கும் விதமாக இந்திய தபால் துறை விரைவில் பிளிப்கார்ட், ....»