கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க தொண்டர்கள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்: ராகுல் || Congress General Secretary Rahul Gandhi today appealed the party workers to work unitedly
Logo
சென்னை 01-08-2015 (சனிக்கிழமை)
  • சென்னையில் பல இடங்களில் கனமழை
  • மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று உறுதி அளித்தால் மட்டுமே உடல் வாங்கப்படும்: சசிபெருமாள் மகன் பேட்டி
  • சென்னையிலிருந்து மேட்டூருக்கு நிலக்கரி ஏற்றிச்சென்ற ரெயில் பெட்டியில் தீ விபத்து
  • கன்னியாகுமரி: சசி பெருமாளின் உடல் பிரேத பரிசோதனை வீடியோ செய்யப்படுகிறது
கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க தொண்டர்கள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்: ராகுல்
கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க தொண்டர்கள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்: ராகுல்
தவாங்கீர்,ஜூன்.3-
 
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, தற்போது கர்நாடக மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள தவாங்கீரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் கட்சியின் கமிட்டி தலைவர்கள், வட்டாரக் குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் ராகுல் உரையாடினார். 60 நிமிடங்கள் நடைபெற்ற இந்த உரையாடலின்போது அடிமட்டத்திலிருந்து கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராகுல் பதிலளித்தார்.
 
பொதுத் தேர்தலின்போது கட்சிப் பணியாளர்கள் சிலர், கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராகப் பணியாற்றி அவர்களைத் தோற்கடித்ததாகக் குற்றம்சாட்டிய உறுப்பினர்கள், தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தினர்.
 
இதனைத் தொடர்ந்து பேசிய ராகுல், கட்சியின் தொண்டர்கள் சீனியர், ஜூனியர் என்ற வேறுபாடுகள் இல்லாத வகையில் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். அப்படி பணியாற்றினால்தான் அடுத்த தேர்தலில் வெற்றிபெற்று கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்றார்.
 
மத்திய அமைச்சர்களான வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான மதுசூதன் மிஸ்ட்ரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

யாகூப் இறுதிச்சடங்கில் தீவிரவாதிகள் பங்கேற்றனர்: திரிபுரா கவர்னர் தகவல்

புதுடெல்லி, ஆக.1– மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டான். அன்று இரவு மும்பையில் ....»

MM-TRC-B.gif