லோக்பால் சட்டம் வந்தால் தவறு செய்பவர்கள் பயப்படுவர்: கிரண் பேடி || Lokpal will create fears of law as in UAE Kiran Bedi
Logo
சென்னை 05-09-2015 (சனிக்கிழமை)
  • கர்நாடக மாநிலத்தில் இன்று பந்த்
  • மியூசிக் டைரக்டர் ஆதேஷ் ஸ்ரீவாஸ்தவா புற்றுநோயால் மரணம்
  • டெல்லி, பெங்களூர் விமான நிலையங்களுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்
  • ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
  • காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்
  • நடுவானில் பயணிக்கு நெஞ்சுவலி: சென்னையில் விமானம் அவசர தரையிறக்கம்
லோக்பால் சட்டம் வந்தால் தவறு செய்பவர்கள் பயப்படுவர்: கிரண் பேடி
லோக்பால் சட்டம் வந்தால் தவறு செய்பவர்கள் பயப்படுவர்: கிரண் பேடி
புதுடெல்லி, ஜூன்.3-
 
ஊழல் ஒழிப்புக்காக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, சமூக சேவகர் அன்னா ஹசாரேவும், யோகாசன குரு ராம்தேவும் டெல்லியில் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். உண்ணாவிரதப் பந்தலில் திரண்டிருந்தவர்களிடையே ஹசாரே குழு உறுப்பினர் கிரண்பேடி பேசியதாவது;
 
ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் ஜனநாயகம் இல்லை. அங்கு திருடர்களின் கைகள் வெட்டப்படுகின்றன. அங்கு சட்டத்தைக் கண்டு அஞ்சும் நிலை உள்ளது. அதேபோல், லோக்பால் மசோதா சட்டமாக்கப்பட்டு அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. கொண்டு வரப்பட்டால், இங்கும் தவறு செய்பவர்கள் பயப்படும் நிலை ஏற்படும்.
 
ஊழலுக்கு எதிரான எங்களின் இந்தப் போராட்டத்தை மக்கள், பஞ்சாயத்து மட்டத்தில் இருந்து மக்களவை வரை கொண்டு செல்ல வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான பிரதமர் மற்றும் 14 கேபினட் அமைச்சர்கள் மீது சிறப்புப் புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ. அமைப்பு அரசுக்கு கட்டுப்படாத சுதந்திரமான அமைப்பாக இருக்க வேண்டும்.
 
லோக்பால் மசோதாவை எதிர்த்த அரசியல்வாதிகளுக்கு மக்கள் அடுத்த தேர்தலில் ஓட்டு போடக்கூடாது.
 
இவ்வாறு கிரண் பேடி பேசினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பீகார் சட்டசபை தேர்தலை 5 கட்டமாக நடத்த முடிவு: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

புதுடெல்லி, செப். 5–தற்போதைய பீகார் சட்டசபையின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் ....»