பாகிஸ்தானில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி || Unidentified gunmen shot and killed 6 persons in Quetta
Logo
சென்னை 04-05-2015 (திங்கட்கிழமை)
பாகிஸ்தானில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி
பாகிஸ்தானில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி
இஸ்லாமாபாத்,ஜூன்.3-
 
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள கடை ஒன்றில் அடையாளம் தெரியாத மர்ம மனிதன் ஒருவன் இன்று காலை துப்பாக்கியுடன் நுழைந்தான். கடைக்குள் நுழைந்த அவன், திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். காயமடைந்த போலீசார் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
பிரதமர் யூசுப் ராசா கிலானியின் வருகைக்கு சற்று முன்னர் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
 
பலுசிஸ்தான் மாகாணத்தில் நிலவி வரும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட பலர் காணாமல் போனது உள்ளிட்ட பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையதாகக் கூறி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் இயக்கத்தினர் அரசின் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 
பலுசிஸ்தானில் காணாமல் போனவர்களில் 200-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ராஜஸ்தான் சிறையில் வார்டன்களுடன் கைதிகள் மோதல்: 2 பேர் படுகாயம்

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மத்திய சிறைச்சாலையில் சிறை வார்டன்களுடன் கைதிகள் மோதலில் ஈடுபட்டதில் 2 பேர் ....»

amarprakash160x600.gif