நாகர்கோவிலில் வீடு புகுந்து 14 பவுன் நகை கொள்ளை || Nagercoil house 14 pawn jewels robbery
Logo
சென்னை 01-07-2015 (புதன்கிழமை)
நாகர்கோவிலில் வீடு புகுந்து 14 பவுன் நகை கொள்ளை
நாகர்கோவிலில் வீடு புகுந்து 14 பவுன் நகை கொள்ளை
நாகர்கோவில்,ஜுன்.3-
 
நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளாடிச்சிவிளை ஆசாத் நகரைச் சேர்ந்தவர் முகம்மது ஜாபர். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சம்சுன் மகாத். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை சம்சுன் மகாத் வீட்டை பூட்டி விட்டு தனது குழந்தைகளுடன் தொழுகைக்காகச் சென்றார்.
 
பின்னர் இரவு வீடு திரும்பியபோது கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த சம்சுன் மகாத், வீட்டுக்குள் ஓடிச் சென்றார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 14 பவுன் நகையும் கொள்ளை போய் இருந்தது. சம்சுன் மகாத் வெளியே செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
 
இதுபற்றி கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு அங்கு பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.
 
முக்கிய பிரமுகர்கள் பலரும் வசிக்கும் வெள்ளா டிச்சிவிளை பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - கன்னியாகுமரி

MM-SCLV-Tamil.gif