புதுக்கோட்டை இடைத்தேர்தல்: வாகன சோதனையில் இதுவரை ரூ.61 லட்சம் பறிமுதல் || pudukkottai vehicle checking cash confiscated
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: வாகன சோதனையில் இதுவரை ரூ.61 லட்சம் பறிமுதல்
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: வாகன சோதனையில் இதுவரை  ரூ.61 லட்சம் பறிமுதல்
புதுக்கோட்டை, ஜூன்.2-

புதுக்கோட்டை இடைத் தேர்தல் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பது உள்ளிட்ட வற்றிற்காக புதுக்கோட்டை தொகுதியை சுற்றிலும் 8 இடங்களிலும், மாவட்ட பகுதியில் 7 இடங்களிலும் என மொத்தம் 15 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரிகள், போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று புதுக்கோட்டை மாலை யீட்டை அடுத்த வெள்ளாற்றுப் பாலம் சோதனைச் சாவடியில் நேற்று காலை பறக்கும் படை துணை தாசில்தார்கள் தமிழ்மணி, நாகராஜன், நிலையான கண்காணிப்புக்குழு துணை தாசில்தார் முத்துக்குமார், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், ஷாஜ ஹான், சப்-இன்ஸ்பெக்டர்கள் (பயிற்சி) கணேசலிங்க பாண்டி, கணேசன், உதவி கமாண்டெண்ட் எஸ்.கே.ஜா, சுபேதார் பல்பீர்சிங் தலைமையிலான எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தபோது, அந்த காரில் ரூ.3 லட்சம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது பற்றி அந்த காரில் இருந்தவரிடம் விசாரித்தபோது, அவர் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்த மங்கலத்தை சேர்ந்த கண்ணன்(வயது 41) ஒப்பந்தக்காரர் என்பது தெரிய வந்தது.

தன்னிடம் வேலை பார்க்கிறவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக அந்த பணத்தை எடுத்துக் கொண்டு, காரில் மதுரையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருப்பதாக, கண்ணன் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பணத்திற்கான முறையான ஆவணங்கள் இல்லை என்பது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முத்துமாரியிடம் ஒப்படைத்தனர். இது குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இடைத்தேர்தலையொட்டி நடைபெற்று வரும் வாகன சோதனையில், வாகனங்களில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததாக இதுவரை ரூ.61 லட்சத்து 31 ஆயிரத்து 296 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - புதுக்கோட்டை

section1

தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம் - நாட்டை விட்டு போவதாக சொல்வதை ஏற்க முடியாது: மேகாலயா கவர்னர்

புதுக்கோட்டை, நவ. 28–புதுக்கோட்டையில் தேசிய பேரவை சார்பில் மேகாலயா மாநில கவர்னர் சண்முகநாதனுக்கு பாராட்டு விழா ....»

MudaliyarMatrimony_300x100px.gif