முழு அடைப்பு எதிரொலி: திருப்பூரில் 6 ஆயிரம் பனியன் கம்பெனிகள் மூடப்பட்டன || six thousand company closed in tirupur for strike
Logo
சென்னை 28-07-2015 (செவ்வாய்க்கிழமை)
முழு அடைப்பு எதிரொலி: திருப்பூரில் 6 ஆயிரம் பனியன் கம்பெனிகள் மூடப்பட்டன
முழு அடைப்பு எதிரொலி: திருப்பூரில் 6 ஆயிரம் பனியன் கம்பெனிகள் மூடப்பட்டன
கோவை, மே. 31-
 
மத்திய அரசு பெட்ரோல் விலையை சமீபத்தில் லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசு உயர்த்தியது. இந்த விலை உயர்வு பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.
 
பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பாரதிய ஜனதா கட்சியும், கம்யூனிஸ்டு கட்சிகளும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி இன்று முழு அடைப்பு நடந்தது.
 
முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் திருப்பூரில் பஸ், லாரி, ஆட்டோக்கள் இன்று வழக்கம் போல் ஓடின. ஆனால் பனியன் கம்பெனிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
 
திருப்பூரில் 6 ஆயிரம் பனியன் கம்பெனிகள் உள்ளன. அவை அனைத்தும் இன்று செயல்படவில்லை. இதே போல் 700 பிரிண்டிங் நிறுவனங்கள், 500 எம்பிராய்டரி நிறுவனங்கள், 500 நிட்டிங் நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. பனியன் நிறுவனங்கள் செயல்படாததால் இன்று 30 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்படும் என்று வர்த்தக பிரமுகர்கள் கூறினார்கள்.ஓட்டல்கள், பேக்கரிகள், கடைகள் அனைத்தும் மூடிக்கிடந்தன. அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. தியேட்டர்களில் பகல் காட்சி சினிமா ரத்து செய்யப் பட்டது.
 
நீலகிரி மாவட்டத்தில் பஸ், லாரிகள் வழக்கம் போல் ஓடின. ஆனால் ஆட்டோக்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் வழக்கம் போல் திறந்திருந்தன.
 
கோவை மாவட்டத்தில் முழு அடைப்பால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. வழக்கம் போல் தனியார் மற்றும் அரசு பஸ்கள், லாரிகள் ஓடுகின்றன. குறைந்த அளவிலான ஆட்டோக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
 
மேட்டுப்பாளையத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து வந்து கொண்டிருக்கின்றனர்.
 
கோவை மாநகரில் மட்டும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலையம், ரெயில் நிலையம் பகுதிகளில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கோவையில் இருந்து இன்று காலை வழக்கம் போல் பஸ்கள் கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்றன.         
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தென் இந்தியாவில் முதல் முறையாக பயோ டீசல் மூலம் வாகனங்களை இயக்க சோதனை ஓட்டம்

தென் இந்தியாவில் முதல் முறையாக ‘பயோ டீசலை’ பயன்படுத்தி வாகனங்களை இயக்கும் சோதனை ஓட்டம் தொடங்கி ....»

MM-SCLV-B- with elevation.gif