புதுக்கோட்டை இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 300 எல்லை பாதுகாப்பு படையினர்: போலீஸ் சூப்பிரண்டு தகவல் || extra security to pudukkottai bye election police supertindent informations
Logo
சென்னை 31-07-2014 (வியாழக்கிழமை)
  • மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை லலிதாவுக்கு வெள்ளி
  • லிபியாவின் முன்னாள் துணை பிரதமர் கடத்தல்
  • காமன்வெல்த்: ஹாக்கி காலிறுதியில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து வெளியேறியது இந்தியா
  • சகரான்பூர் கலவரத்துக்கு காரணமான 6 முக்கிய குற்றவாளிகள் கைது
  • இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,321 ஆக உயர்வு
புதுக்கோட்டை இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 300 எல்லை பாதுகாப்பு படையினர்: போலீஸ் சூப்பிரண்டு தகவல்
புதுக்கோட்டை இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 300 எல்லை பாதுகாப்பு படையினர்:
போலீஸ் சூப்பிரண்டு தகவல்
புதுக்கோட்டை, மே. 30-
 
புதுக்கோட்டை இடைத்தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் கூறியதாவது:-
 
இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக உள்ளூர் போலீசாருடன் இணைந்து பணியாற்ற ஏற்கனவே 5 கம்பெனி துணை ராணுவம் (எல்லை பாதுகாப்புப்படை) வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை போதுமானதாக இருக்கிறது. எனினும் வி.ஐ.பி.க்கள் வருகை மற்றும் ஓட்டுப்பதிவு நாளில் கூடுதல் எண்ணிக்கையில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
இதற்காக மேலும் 300 துணை ராணுவப்படை வீரர்களை அனுப்புமாறு கேட்டுள்ளோம். இது தவிர வெளிமாவட்டத்தில் இருந்து 500 போலீசார் வர வழைக்கப்பட உள்ளனர். கூடுதலாக 250 ஊர்க்காவல் படைவீரர்களும் பயன்படுத்தப்படுவார்கள்.
 
தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்றுவது தொடர்பாக எந்த பாரபட்சமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வாகன சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்.அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் எண்ணிக்கையை விட கூடுதல் வாகனங்கள் பயன்படுத்த கூடாது.
 
தேர்தல் கமிஷனில் பெறப்பட்ட அனுமதி கடிதம் ஒட்டப்படாத வாகனங்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது. மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - புதுக்கோட்டை