சர்ச்சையை ஏற்படுத்திய ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார் || Gen V K Singh to retire tomorrow
Logo
சென்னை 22-10-2014 (புதன்கிழமை)
சர்ச்சையை ஏற்படுத்திய ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார்
சர்ச்சையை ஏற்படுத்திய ராணுவ தளபதி வி.கே.சிங் நாளை ஓய்வு பெறுகிறார்
புதுடெல்லி, மே 30-
 
42 ஆண்டுகாலம் ராணுவத்தில் பணியாற்றி உள்ள வி.கே.சிங் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகள் 3 மாதங்களாக தலைமைத் தளபதியாக பதவி வகித்து வருகிறார்.
 
62 வயதாகும் இவர் அரியானா மாநிலம் ரோடக் மாவட்டத்தில் உள்ள பபோரா அன்ற கிராமத்தை சேர்ந்தவர். சில மாதங்களுக்கு முன் தனது வயது விவகார சர்சையில் சிக்கினார்.  ராணுவ தளவாடங்கள் வாங்குவது குறித்து புகார் எழுப்பியதும் ராணுவத்தில் தற்போது போதிய அளவில் ஆயுதங்கள் இல்லை என்றதும் இவர் ஏற்படுத்திய சர்ச்சைகள். எனினும், இவர் நேர்மையான மற்றும் கண்டிப்பான அதிகாரி என பெயர் பெற்றிருக்கிறார்.
 
இவரது பதவி காலத்துக்கு பின் விக்ரம் சிங் புதிய ராணுவ தலைமைத் தளபதியாக பதவியேற்க இருக்கிறார். சர்ச்சையின் போது இவர் குறிப்பிட்டிருந்த வயது, ஆவணங்களில் இருந்திருந்தால் மேலும் 10 மாதங்கள் பதவியில் நீடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

வடகிழக்கு பருவமழை தீவிரம்: முல்லைப்பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif