குளச்சல்அருகே திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் கண் முன்பு காதலி தற்கொலை || near kulachal Refused to marriage a boyfriend Girlfriend commit suicide
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
குளச்சல்அருகே திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் கண் முன்பு காதலி தற்கொலை
குளச்சல்அருகே திருமணத்துக்கு மறுத்ததால்  காதலன் கண் முன்பு காதலி தற்கொலை
குளச்சல், மே.30-

குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை ஆளுவிளையை சேர்ந்தவர். செல்வ மணி. இவரது மகன் செந்தில் வினோ. பி.இ.பட்டதாரி. இவர் கடந்த ஒரு வருடமாக சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர் வைசராக வேலைசெய்தார்.

இந்த கம்பெனியில் அருகில் உள்ள இன்னொரு கம்பெனியில் திருவள்ளூர் செவ்வாய் பேட்டை ரோடு கீழம்பாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் லாவண்யா (வயது 24 )என்பவரும் வேலை செய்தார். இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டதால் அவர்களுக்கிடையே காதல் அரும்பியது.

காதல் ஜோடி அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செந்தில் வினோ ஊருக்கு வந்து விட்டார். மேலும் லாவண்யாவிடம் சரியாக பேசவில்லை. மேலும் லாவண்யா போன் செய்த போது செந்தில் வினோவின் போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது.

இதையடுத்து லாவண்யா, காதலன் செந்தில் வினோவை தேடி ஆளு விளைக்கு வந்தார். அங்கு காதலனை பார்த்ததும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். அதற்கு செந்தில் வினோ மறுத்தார். இதனால் மனம் உடைந்த லாலண்யா கையில் வைத்திருந்த விஷத்தை குடித்தார்.

இதையடுத்து செந்தில் வினோ அவரை குளச்சலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லாவண்யா இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த குளச்சல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் லாவண்யா பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து செந்தில் வினோவை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் சென்னையில் உள்ள லாவண்யாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று மாலை வருவார்கள் என்று தெரிகிறது. அவர்கள் வந்து போலீசில் முறைப்படி புகார் அளித்த பின் போலீசார் காதலன் செந்தில் வினோவை கைது செய்து மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - கன்னியாகுமரி