சின்னாளபட்டி அருகே பட்டப்பகலில் பெண்களை கட்டிப்போட்டு 10 பவுன் நகை கொள்ளை: மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு || 10 sovereign gold robbery near sinnalapatti
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
சின்னாளபட்டி அருகே பட்டப்பகலில் பெண்களை கட்டிப்போட்டு 10 பவுன் நகை கொள்ளை: மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
சின்னாளபட்டி அருகே  பட்டப்பகலில்  
பெண்களை கட்டிப்போட்டு 10 பவுன் நகை கொள்ளை: மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
சின்னாளப்பட்டி, மே. 30-
 
திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் 4 வழிச்சாலையில் சின்னாளபட்டி அருகே கலிக்கம்பட்டி பிரிவு உள்ளது. இங்கிருந்து கலிக்கம்பட்டிக்கு செல்லும் பகுதியில் வசித்து வருபவர் ஜான் ஆபிரகாம். இவர் திண்டுக்கல் அண்ணா வணிக மையத்தில் கமிஷன் பூ கடை நடத்தி வருகிறார்.
 
ஆபிரகாம் கடந்த வாரம் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். நேற்று இவரும், இவரது மனைவி அமலோற்பவ மேரி, வேலைக்காரி வீர லட்சுமி ஆகிய 3 பேர் மட்டும் வீட்டில் இருந்தனர்.
 
மதியம் 1 மணி அளவில் வீட்டின் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த 4 பேர் சமயம் பார்த்து திடீரென்று ஆபிரகாம் வீட்டிற்குள் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நுழைந்தனர். பின்னர் அவர்கள் கதவை உள்பக்கமாக தாழிட்டு அமலோற்பவ மேரி, வீரலட்சுமியை கத்தியை காட்டி மிரட்டி அவர்களை கட்டிப் போட்டனர்.
 
ஜான் ஆபிரகாம் இருதய அறுவை சிகிச்சை செய்து இருந்ததால், அவரால் கொள்ளையை தடுக்க முடியவில்லை. அந்த கும்பல் வீட்டில் பீரோவில் இருந்த 5 பவுன் நகைகளையும், அமலோற்பவமேரியை தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயின், வீரலட்சுமி போட்டிருந்த 2 கிராம் தோடையும் திருடிக் கொண்டு தப்பினர்.
 
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னாளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று விசாரணை நடத்தினர்.
 
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் துணிச்சலாக கொள்ளை அடித்த 4 கொள்ளையர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தெற்காசிய விளையாட்டு: தடகளத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு தங்கப்பதக்கம்

12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தி (அசாம்), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இரண்டு நகரங்களில் நடந்து  ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif