கொல்கத்தா அணி வெற்றிக்காக ஷாருக்கானுக்கு விருந்து கொடுப்பதா?: பிரபுதேவாவுக்கு கண்டனம் || ipl win party to shahrukh khan condemn to prabhu deva
Logo
சென்னை 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை)
கொல்கத்தா அணி வெற்றிக்காக ஷாருக்கானுக்கு விருந்து கொடுப்பதா?: பிரபுதேவாவுக்கு கண்டனம்
கொல்கத்தா அணி வெற்றிக்காக ஷாருக்கானுக்கு விருந்து கொடுப்பதா?:
பிரபுதேவாவுக்கு கண்டனம்
சென்னை, மே.29-
 
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சென்னை அணியை வென்ற கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கு பிரபுதேவா விருந்து அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அடையாறு போட்கிளப் ரோட்டில் உள்ள பிரபுதேவா வீட்டில் இந்த விருந்து நடந்தது.
 
சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருந்த ஷாருக்கான் அங்கு நடந்த வெற்றி விழா கொண்டாட்டங்களில் பங்கேற்று விட்டு இரவு 12 மணிக்கு மேல் பிரபுதேவா அளித்த விருந்துக்கு சென்றார். அவருடன் கொல்கத்தா அணி ஆதரவாளர்களும் விருந்தில் பங்கேற்றனர்.
 
சென்னை அணி தோற்ற வேதனையில் தமிழக ரசிகர்கள் இருந்த நிலையில் ஷாருக்கானுக்கு பிரபுதேவா விருந்து கொடுத்தது சகிக்க முடியாதது என்று இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர். குமார் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
பிரபுதேவா ‘ரவுடி ரத்தோர்’ படக்குழுவினரின் விருந்து என்ற பெயரில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வென்ற கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கானுக்கும் அந்த அணியை ஆதரித்த மும்பை நடிகர், நடிகைகளுக்கும் சென்னையில் விருந்து கொடுத்து குதூகலித்தது வேதனை அளிக்கிறது.
 
பிரபுதேவா வாழ்ந்தது வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். இங்குள்ள ரசிகர்களால்தான் பிரபலமானார். இந்திப் படம் இயக்கப் போனதும் மாறிவிட்டார். இந்தி நடிகர்கள்தான் அவருக்கு பெரிதாக தெரிகிறார்கள். சென்னை அணி தோற்றதும் விருந்தையே ரத்து செய்து இருக்க வேண்டும். அல்லது கொல்கத்தா அணியினரை அழைக்காமல் விட்டு இருக்க வேண்டும். அதை செய்யாமல் விட்டது தமிழர்களுக்கு எதிரானதாகவே கருதப்படும்.
 
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
ஆனால் பிரபுதேவா தரப்பில் இக்குற்றச்சாட்டை மறுத்தனர். ‘ரவுடி ரத்தோர்’ படக்குழுவினர் சார்பில் தமிழ், இந்தி நடிகர், நடிகைகளுக்கு அந்த விருந்து கொடுக்கப்பட்டது. அப்படத்தில் நடித்த அக்ஷய்குமார் சோனாக்சி பங்கேற்றனர்.
 
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளும் பங்கேற்றனர். விருந்து நடந்த அன்று யதேச்சையாக கொல்கத்தா அணி வென்றுள்ளது. அதற்கும் விருந்துக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - சினிமா செய்திகள்

MudaliyarMatrimony_300x100px.gif