உ.பி.சட்டசபைபயில் கவர்னர் உரை: சமாஜ்வாடி பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடிதடி ரகளை || Uttar pradesh assembly samajvadi pahujan samaj party mla
Logo
சென்னை 14-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
உ.பி.சட்டசபைபயில் கவர்னர் உரை: சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடிதடி-ரகளை
உ.பி.சட்டசபைபயில் கவர்னர் உரை: சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி
எம்.எல்.ஏ.க்கள் அடிதடி-ரகளை
லக்னோ, மே. 28-

உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமை யிலான சமாஜ் வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர் முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் இன்று தொடங்கியது.

அகிலேஷ் யாதவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் உரை வாசிக்க தொடங்கியதுமே அமளியில் ஈடுபட்டனர்.

சபைபயின்  மைய பகுதிக்கு வந்து கூச்சல் போட்டனர். கவர்னர் உரையை கிழித்து எறிந்தனர். ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக குற்றம் சாட்டினார்கள். பதிலுக்கு ஆளும் கட்சியான சமாஜ் வாடி எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுத்தனர். இரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் மோதிக்கொண்டனர்.

அடிதடியில் ஈடுபட்டதால் சபைப ஒரே அமளி நிறைந்து காணப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களை சபைப காவலர்கள் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் முரண்டு பிடித்து ரகளையில் ஈடுபட்டனர்.

இந்த அமளி நடந்து கொண்டு இருக்கும் போது முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சட்டசபைபயில் இருந்தார். அமளி காரணமாக சபை பிற்பகல் 12.30 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

காஷ்மீரில் இமாமை கோடரியால் வெட்டிக் கொன்ற மகன் கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்நாக் மாவட்டத்தில் உள்ள மசூதியில் இமாமாக இருந்த ஒருவர் அடையாளம் தெரியாத ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif