ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி?: பி.ஏ.சங்மா பேட்டி || how is the winning chance in the president election sangma interview
Logo
சென்னை 06-03-2015 (வெள்ளிக்கிழமை)
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி?: பி.ஏ.சங்மா பேட்டி
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி?: பி.ஏ.சங்மா பேட்டி
புதுடெல்லி, மே.27-
 
ஜுலை மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகரும், தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார்.
 
பழங்குடியினத்தைச் சேர்ந்த இவருக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, பிஜூ ஜனதாதள தலைவரும், ஒடிசா முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் ஆகியோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மற்ற கட்சிகளும் பி.ஏ.சங்மாவை ஆதரிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர். ஆனால் தேசியவாத காங்கிரஸ் பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிக்க முன்வரவில்லை.
 
இந்த நிலையில், பி.ஏ.சங்மா நேற்று டெல்லியில் பெண் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
ஜனாதிபதி தேர்தலில் தனித்து வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்யக்கூடிய அளவுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கோ, தேசிய ஜனநாயக கூட்டணிக்கோ போதிய பலம் இல்லை. எனவே என்னை பொது வேட்பாளராக அறிவிக்க கருத்து ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.
 
அமெரிக்காவில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி ஆவார் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் அந்த இனத்தைச் சேர்ந்த ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி ஆகும் போது, இந்தியாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி ஆக முடியாதா?
 
எனது மகள் அகதா சங்மா ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மந்திரியாக இடம் பெற்று உள்ளார். பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று அவர் பிரசாரம் செய்து வந்தார். நானும் பிரசாரம் மேற்கொண்டேன்.
 
சென்னை செல்லும் வரை நான் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் இல்லை. அங்கு சென்ற பிறகு, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கும் எனக்கு ஆதரவு தெரிவித்தனர்.நான் போட்டியிடுவது உறுதியானதும், அகதா தனது பிரசாரத்தை நிறுத்திக்கொண்டார்.
 
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் பழங்குடியின வேட்பாளரை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறேன். அவர்களை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கேட்டு இருக்கிறேன்.  
 
பி.ஏ.சங்மா இவ்வாறு கூறியதும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மந்திரியாக இருக்கும் உங்கள் மகள் அகதா சங்மா ஜனாதிபதி தேர்தலில் உங்களுக்கு வாக்கு அளிப்பாரா? என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு சங்மா பதில் அளிக்கையில் இது ரகசிய வாக்கெடுப்பு முறை என்பதால் யார் யாருக்கு ஓட்டுப்போட்டார்கள் என்பது யாருக்கும் தெரியாது என்றார்.
 
இந்த தேர்தலில் பெரிய அளவில் மறைமுக வாக்குகள் பதிவாக வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார். அகதா ஐக்கிய முற்போக்கு கூட்டணி எடுக்கும் முடிவின்படி செயல்படுவார் என்றும் கூறினார்.
 
முன்பு, சோனியா காந்தி வெளிநாட்டுக்காரர் என்ற பிரச்சினையை கிளப்பி அவர் பிரதமர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீங்கள், ஜனாதிபதி தேர்தலில் அவர் உங்களை ஆதரிப்பார் என்று எப்படி எதிர்பார்க்கலாம்? என்று கேட்கப்பட்டது. அதற்கு சங்மா, தனிப்பட்ட முறையில் அல்லாமல் கொள்கை ரீதியாக அந்த பிரச்சினையை தான் கிளப்பியதாக பதில் அளித்தார்.
 
காங்கிரசின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் உங்களால் வெற்றி பெற முடியுமா? என்று கேட்டதற்கு தனிப்பட்ட முறையில் தனக்கு பலருடைய ஆதரவு இருப்பதாகவும், ஜனாதிபதி தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் பி.ஏ.சங்மா பதில் அளித்தார்.
 
மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்தான் பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மட்டும் அல்லாமல் முன்பு பிரதமர்களாக இருந்த தேவேகவுடா, ஐ.கே.குஜ்ராலுக்கும் இது பொருந்தும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

தலீபான்களால் கடத்தப்பட்ட பாதிரியாரை விடுவிக்க பணம் தரப்பட்டதா?: காங். எழுப்பும் புதிய சர்ச்சை

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானில் தலீபான்களால் கடத்திச் செல்லப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார், ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif