16 மாத குழந்தைக்கு செயற்கை இருதயம்: இத்தாலி டாக்டர்கள் சாதனை || child artificial heart italy doctors
Logo
சென்னை 03-09-2014 (புதன்கிழமை)
  • உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தத்து நியமனம்
  • சென்னையில் கருணாநிதி தலைமையில் இன்று டெசோ ஆர்ப்பாட்டம்
  • ராமேசுவரம் மீனவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
  • என்.எல்.சி தொழிலாளர்கள் இன்று இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
16 மாத குழந்தைக்கு செயற்கை இருதயம்: இத்தாலி டாக்டர்கள் சாதனை
16 மாத குழந்தைக்கு செயற்கை இருதயம்: இத்தாலி டாக்டர்கள் சாதனை
ரோம், மே 26-
 
இத்தாலியில் பிறந்து 16 மாதங்களே ஆன ஆண் குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அக்குழந்தையை ரோம் நகரில் உள்ள பாம்பினோ கெசு என்ற ஒரு தனியார் ஆஸ் பத்திரியில் சேர்த்தனர்.  
 
அங்கு அக்குழந்தையை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அண்போனியா அமோடியா பரிசோதனை செய்தார். அப்போது குழந்தையின் இருதயத்தில் நோய் தாக்கி பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.  
 
எனவே, அந்த குழந்தைக்கு மிகச்சிறிய அளவில் செயற்கை இருதயம் தயாரித்து பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி டைட்டானியம் உலோகத்தினால் ஆன 11 கிராம் எடையுள்ள செயற்கை இருதயம் உருவாக்கப்பட்டு அது ஆபரேஷன் மூலம் குழுந்தைக்கு பொருத்தப்பட்டது. அது ஒரு நிமிடத்துக்கு 1.5 லிட்டர் ரத்தத்தை சீராக இயங்க செய்யும் திறன் படைத்தது.
 
தற்போது அந்த குழந்தை உடல் நலத்துடன் உள்ளது. பொதுவாக பெரியவர்களுக்கு 900 கிராம் எடையுள்ள செயற்கை இருதயம் பொருத்தப்படும்.  
 
ஆனால், இந்த குழந்தைக்கு 11 கிராம் எடையுள்ள இருதயத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். இது ஒரு மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
 
இதற்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஜார்விக் மிருகங்களுக்கு பொருத்தி சோதனை மேற்கொண்டிருந்தார். அவரது தொழில்நுட்பம் இந்த ஆபரேசனில் பயன்படுத்தப்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

சோமாலியாவில் அமெரிக்கா வான் வழி தாக்குதல்: ஆறு தீவிரவாதிகள் பலி

சோமாலியா நாட்டில் சோமாலி இஸ்லாமிய தீவிரவாத குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. அக்குழுவின் தலைவரான அகமது ....»