சென்னையில் 9 நாட்களாக வாட்டி வதைக்கும் அக்னி வெயில்: 104 டிகிரிக்கு மேல் கொளுத்துகிறது || chennai heavy heat 104 degree increase
Logo
சென்னை 29-07-2014 (செவ்வாய்க்கிழமை)
  • சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் 50 மின்சார ரெயில்கள் பராமரிப்பு பணிக்காக இன்று ரத்து
  • மாலைமலர் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் ரம்ஜான் தின வாழ்த்துக்கள்
  • லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல்
  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டியது
  • நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதல்
சென்னையில் 9 நாட்களாக வாட்டி வதைக்கும் அக்னி வெயில்: 104 டிகிரிக்கு மேல் கொளுத்துகிறது
சென்னையில் 9 நாட்களாக வாட்டி வதைக்கும் அக்னி வெயில்: 104 டிகிரிக்கு மேல் கொளுத்துகிறது
சென்னை, மே.26-

அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அதன்பிறகு நாளுக்கு நாள் வெயிலின் வேகம் அதிகரித்து வந்தது. கடந்த சில தினங்களாக அது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

ஆரம்பத்தில் 100 டிகிரியை தொட்ட வெயில் தற்போது சராசரியாக 104 டிகிரியை தாண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

சென்னையில் 9 நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் வெயில் அளவு 112 டிகிரியை தொட்டது. இதுகடந்த 4 ஆண்டுகளில் இதேநாளில பதிவான வெயிலைவிட மிகவும் அதிகம்.

சென்னையில் தொடர்ந்து 104 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த வருடம் மே மாதம் இதே நாட்களில் அதிக அளவு வெயில் 107.06 டிகிரியாக இருந்தது. இந்த ஆண்டு நேற்று 107.60 டிகிரி வெயில் அடித்தது. இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

அக்னி வெயில் முடிவடைய இன்னும் 2 நாட்கள் இருக்கிறது. அதன்பிறகும் சில தினங்கள் வெயின் வேகம் இருக்கும். கேரளாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்பிறகு வெயிலின் அளவு படிப்படியாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

காமன்வெல்த் போட்டியில் தங்கம்: சதீஷ்குமாருக்கு கருணாநிதி வாழ்த்து

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்ற தமிழக வீரர் சதீஷ் குமாருக்கு தி.மு.க. தலைவர் ....»