Logo
சென்னை 25-05-2013 (சனிக்கிழமை)
பா.ஜனதா கட்சியில் தொலைநோக்கு பார்வை இல்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடெல்லி,மே.25-
 
மும்பையில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பா.ஜனதா கட்சியில் சத்தம் மட்டுமே உள்ளது. தொலைநோக்கு பார்வை எதுவும் இல்லை. தற்போது நடைபெற்று வரும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த தீர்மானங்களில் உருப்படியான கருத்துகள் இல்லை. தலைவர், சூப்பர் தலைவர், உச்சநிலை தலைவர்கள் நிறைந்த கட்சியாக பா.ஜனதா கட்சி திகழ்கிறது.
 
தேர்தலில் வாக்காளர்களால் புறக்கணிக்கப்பட்டதை பா.ஜனதா கட்சியால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பழங்குடியினருடன் மோதல்: கிராம தலைவியின் கணவர் உயிரோடு எரித்துக்கொலை

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 350 கி.மீட்டர் தூரத்தில் புர்ணியா மாவட்டம் உள்ளது. இங்குள்ள கிஷன்பூர் பலூவா ....»

Recommendations
Recent Activity