சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் வைகாசி திருவிழா: கொடி ஏற்றத்துடன் தொடங்கியது || vaikunta swami vaigasi festival
Logo
சென்னை 03-09-2015 (வியாழக்கிழமை)
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் வைகாசி திருவிழா: கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் வைகாசி திருவிழா:
கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
சாமிதோப்பு, மே. 25-

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4.30 மணிக்கு பதமிடுதலும், திருக்கொடி பட்டம் பிரகார வலம் வருதலும், திருக்கொடி ஏற்றமும் பணிவிடையும், தர்மங்களும், வாகன பவனியும் நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி,குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்ன தர்மம் நடந்தது மாலை பணி விடையும், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சியும், தர்மங்களும் நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் பணிவிடையும், உகப்படிப்பும், பகல் உச்சிபடிப்பும், காலையும், மாலையும் வாகன பவனியும், இரவு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 8ம் திருவிழாவான 1-ந் தேதி அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணறு சமீபம் கலிவேட்டையாடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

2-ந் தேதி அனுமார் வாகனத்தில் அய்யா எழுந்தருளி தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3-ந் தேதி இந்திர விமானம் வாகனத்தில் எழுந்தருளி தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 11-ம் திருவிழாவான வருகிற 4-ந் தேதி பகல் 12 மணிக்கு அய்யா பல்லாக்கில் பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - கன்னியாகுமரி