பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 3 நாட்கள் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு || Protest against price rise in petrol 3 days thirumavalavan announced
Logo
சென்னை 14-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 3 நாட்கள் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 3 நாட்கள் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு
சென்னை, மே.25-

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல் விலை ரூ.7.50 திடீரென உயர்த்தப்பட்டுள்ளது இந்திய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுபெற்ற அடுத்த நாளே அறிவித்திருப்பது சூழ்ச்சி நிறைந்த நடவடிக்கையாக உள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 18 முறை பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்தியுள்ளது. இதனால் அடித்தட்டு மற்றும் நடுத்தர வகுப்பை சார்ந்த மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வை முழுமையாக திரும்பப் பெறுவதுடன், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தும் முடிவையும் முற்றிலும் கைவிட வேண்டும்.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பாக 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் தமிழகம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

விஜயகாந்தும் காங்கிரஸ் கூட்டணிக்கு வருவார்: குஷ்பு நம்பிக்கை

சென்னை, பிப்.14–தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது கட்சி நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இதுதொடர்பாக ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif