ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி || play off game kolkatta vs delhi IPL season 5 kolkata won by 18 runs
Logo
சென்னை 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை)
ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி
ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி
புனே, மே.23-
 
5-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இறுதிப்போட்டிக்கு இன்னும் இரண்டு ஆட்டங்களே இருக்கிறது. இந்த நிலையில் புனேயில் உள்ள சுபத்ராராய் சகாரா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் லீக் முடிவில் முதலிடத்தை பிடித்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி, 2-வது இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது.
 
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக 27-ந் தேதி நடைபெறும் இறுதிபோட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படமாட்டாது. மாறாக அந்த அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். அதாவது இன்று நடைபெறும் தகுதி நீக்கம் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 25-ந் தேதி மோதும்.
 
டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. கடந்த 2 ஆட்டங்களில் விளையாடாத கேப்டன் ஷேவாக் களம் திரும்பினார். ராஸ் டெய்லர் அணியில் சேர்க்கப்பட்டார். உன்முக்த் சந்த், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் நீக்கப்பட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மனோஜ்திவாரிக்கு பதிலாக லட்சுமி ரத்தன் சுக்லா சேர்க்கப்பட்டார்.
 
டாஸ் ஜெயித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் கம்பீர் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக பிரன்டன் மெக்கல்லம், கேப்டன் கம்பீர் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடினார்கள். கம்பீர் அதிரடியாக விளாசினார். இதனால் ரன்விகிதம் வேகமாக உயர்ந்தது.
 
கம்பீர், வருண் ஆரோன் பந்து வீச்சில் ஒரு ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். அணியின் ஸ்கோர் 5.5 ரன்னாக உயர்ந்த போது கம்பீர், வேணுகோபால் ராவால் சிறப்பான முறையில் ரன்-அவுட் செய்யப்பட்டார்.
 
கம்பீர் 16 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 32 ரன் எடுத்தார். அடுத்து வந்த காலிஸ் நிதானமாகவும் நேர்த்தியாகவும் அடித்து ஆடினார். அணியின் ஸ்கோர் 12.4 ஓவர்களில் 87 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஆட்டக்காரர் பிரன்டன் மெக்கல்லம், நெகி பந்து வீச்சை அடித்து ஆட முயல அது பவுண்டரி எல்லையில் டேவிட் வார்னரிடம் கேட்ச் ஆனது.
 
பிரன்டன் மெக்கல்லம் 36 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன் எடுத்தார். அடுத்து களம் இறங்கிய ஷகிப் அல்-ஹசன் ஒரு ரன்னில் இர்பான் பதான் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் நமன் ஓஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அணியின் ஸ்கோர் 16 ஓவர்களில் 106 ரன்னாக இருந்த போது காலிஸ், உமேஷ் யாதவ் பந்து வீச்சில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். காலிஸ் 33 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 30 ரன் எடுத்தார்.
 
5-வது விக்கெட்டுக்கு சுக்லா, யூசுப் பதானுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக பந்து வீச்சை விரட்டி அடித்தனர். 19-வது ஓவரில் மோர்னே மோர்கல் பந்து வீச்சில் சுக்லா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் தூக்கினார். அந்த ஓவரில் 15 ரன்கள் வந்தது. வருண் ஆரோன் வீசிய கடைசி ஓவரில் 21 ரன்கள் சேர்த்தனர். அதில் சுக்லா ஒரு பவுண்டரியும், யூசுப் பதான் 2 பவுண்டரி, ஒரு சிக்சரும் விளாசினர். இருவரது அதிரடியாலும் கடைசி கட்டத்தில் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
 
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. யூசுப் பதான் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்தும், சுக்லா 11 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 24 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
 
டெல்லி டேர்டெவில்ஸ் அணி தரப்பில் இர்பான் பதான், உமேஷ்யாதவ், நெகி தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
 
பின்னர் 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், கேப்டன் ஷேவாக் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
 
டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. டேவிட் வார்னர் 7 ரன்னிலும், ஷேவாக் (7பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) 10 ரன்னிலும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர்.
 
வார்னர் விக்கெட்டை ஷகிப் அல்-ஹசனும், ஷேவாக் விக்கெட்டை பாலாஜியும் வீழ்த்தினார்கள். அப்போது அணியின் ஸ்கோர் 2.1 ஓவர்களில் 24 ரன்னாக இருந்தது. அடுத்து ஜெயவர்த்தனே, நமன் ஓஜாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். அணியின் ஸ்கோர் 10.2 ஓவர்களில் 83 ரன்னாக இருந்த போது நமன் ஓஜா (28 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 29 ரன்) ரஜத் பாட்டியா பந்து வீச்சில் கம்பீரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
 
அடுத்த சில ஓவர்களில் ஜெயவர்த்தனே (33 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 40 ரன்) ஆட்டம் இழந்தார். அத்துடன் டெல்லி அணியின் வெற்றி நம்பிக்கையும் பட்டு போனது. அதன் பின்னர் வேணுகோபால் ராவ், டெய்லர், நெகி, மோர்னே மோர்கல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
 
கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 32 ரன் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவர்களில் 3 விக்கெட்டுகள் சரிந்தன. முடிவில் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்னே எடுத்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.கொல்கத்தா வீரர் யூசுப் பதான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஐ.எஸ்.எல். கால்பந்து: அரை இறுதிக்கு கோவா தகுதிபெறுமா? கேரளாவுடன் இன்று மோதல்

கொச்சி, நவ 29–ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டி 8 நகரங்களில் ....»

MudaliyarMatrimony_300x100px.gif