ஏமனில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 50 இராணுவ வீரர்கள் பலி || yemen suicide bomber attack military officer dead
Logo
சென்னை 06-07-2015 (திங்கட்கிழமை)
  • சிறுவனை மது குடிக்க வைத்த தாய்மாமன் கைது
  • திகார் சிறை உடைப்பு சம்பவம்: சூப்பிரெண்டு சஸ்பெண்ட்
  • மாற்றாந்தாய் போன்று நடக்கிறது மத்திய அரசு: கர்நாடக அரசு குற்றச்சாட்டு
  • பணமோசடி வழக்கில் லலித் மோடிக்கு அமலாக்கத்துறை சம்மன்
  • வியாபம் ஊழல் குறித்து பாராளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவோம்: மம்தா பானர்ஜி
ஏமனில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 50 இராணுவ வீரர்கள் பலி
ஏமனில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 50 இராணுவ வீரர்கள் பலி
சனா, மே 21-
 
வடக்கு மற்றும் தெற்கு ஏமன் இணைக்கப்பட்டு 22-வது ஆண்டு நினைவு தினத்தை கொண்டாட ஏமனில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டு ராணுவ அணிவகுப்பிற்காக ராணுவ வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த பயிற்சியின் போது, தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் ஏமன் நாட்டு ராணுவ உடை அணிந்து, தன் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதனால் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் 50 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் படுகாயமடைந்த பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும், இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுவதாக அங்குள்ள ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
மேலும், பிப்ரவரி மாதம் அதிபராக பதவி ஏற்ற ஆப்ரபு மன்சூர் ஹாடி கூறுகையில், அல்-கொய்தா அமைப்பினரை ஏமன் நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்க பாடுபடுவதாக சூளுரைத்தார்.
 
சில தினங்களுக்கு முன் அல்-கொய்தா ஆக்கிரமிப்பு பகுதிகளில் ஏமன் நாட்டு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியது இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

காசாவில் செல்லப் பிராணிகளாக வளர்த்த சிங்கக் குட்டிகள் வனவிலங்கு சரணாலயத்தில் ஒப்படைப்பு

இஸ்ரேலுக்கும் காஸா எல்லையில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உச்சகட்ட ....»