புதுவை சினிமா தியேட்டர்களில் 3 ம் வகுப்பு கட்டணம் ரூ.20 ஆக உயர்வு: கலெக்டர் தீபக்குமார் அறிவிப்பு || puduvai cinema threatre 3rd class ticket rate increase collector
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
  • சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவிலிருந்து வந்த பெண் பயணியிடம் 2 கிலோ தங்கம் பறிமுதல்
  • பீகார் மாநிலம் அருகே சாசாராமில் டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் பலி
புதுவை சினிமா தியேட்டர்களில் 3-ம் வகுப்பு கட்டணம் ரூ.20 ஆக உயர்வு: கலெக்டர் தீபக்குமார் அறிவிப்பு
புதுவை சினிமா தியேட்டர்களில் 3-ம் வகுப்பு கட்டணம் ரூ.20 ஆக உயர்வு: கலெக்டர் தீபக்குமார் அறிவிப்பு
புதுச்சேரி, மே. 20-
 
புதுவையில் உள்ள சினிமா தியேட்டர்களில் 3-ம் வகுப்பு கட்டணமாக ரூ.10 மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஏழை எளிய மக்களும் சினிமா பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த எளிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் 3-ம் வகுப்பு கட்டணம் அதிக பட்சமாக ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை புதுவை மாவட்ட கலெக்டர் தீபக்குமார் வெளியிட்டுள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
புதுச்சேரி திரையங்கு உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அரசு திரையரங்கு நுழைவு கட்டணத்தை திருத்தியமைத்துள்ளது. இக்கட்டண உயர்வு நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களை பாதிக்காத வண்ணம் அனைத்து தியைரங்கிலும் 3-ம் வகுப்பு கட்டணம் அதிகபட்சமாக ரூ.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியுள்ள திரையரங்கிற்கு அதிகபட்ச கட்டணமாக (பாக்ஸ் வகுப்பு) ரூ.100-ம், பால்கனி வகுப்பு ரூ.90-ம், முதல் வகுப்பு ரூ.70-ம், 2-ம் வகுப்பு ரூ.50-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
திரையங்கின் பராமரிப்பு செலவு மற்றும் இதர செலவினங்களை கருத்தில் கொண்டு தற்போதுள்ள கட்டணம் சிறிதளவு உயர்த்தப்பட்டு திருத்தியமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு திரையங்கு அமைந்துள்ள இடம் மற்றும் திரையரங்கிற்கு செல்லும் ரசிகர்களுக்கு கிடைக்கும் வசதிகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு திரையரங்கிற்கும் ஏற்றவாறு நுழைவு கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - புதுச்சேரி

section1

தமிழ்நாடு–புதுவை காங்கிரஸ் தலைவர்களுடன் கலந்து பேசி கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும்: குலாம்நபி ஆசாத்

புதுச்சேரி, பிப்.13–காங்கிரஸ் எம்.எல்.ஏ. வல்சராஜ் வெள்ளிவிழாவில் பங்கேற்பதற்காக, மாநிலங்களவை எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் பொது செயலாளருமான ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif