தி.நகர், மாங்காட்டில் வழிப்பறி: குண்டர் சட்டத்தில் 4 கொள்ளையர் கைது || t nagar mangadu snatching 4 theft men arrest gundar law
Logo
சென்னை 02-10-2014 (வியாழக்கிழமை)
தி.நகர், மாங்காட்டில் வழிப்பறி: குண்டர் சட்டத்தில் 4 கொள்ளையர் கைது
தி.நகர், மாங்காட்டில் வழிப்பறி: குண்டர் சட்டத்தில் 4 கொள்ளையர் கைது
சென்னை, மே. 19-
 
ஜாபர்கான்பேட்டை சத்யாநகரை சேர்ந்தவர் செல்வம். இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை வழிப்பறி வழக்குகள் உள்ளன. எம்.ஜி.ஆர் நகரில் வழிப்பறியில் ஈடுபட்ட இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர். இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டதாலும், பொதுமக்களுக்கு அச்சமுட்டும் வகையில் நடந்து கொண்டதாலும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டனர்.
 
இதையடுத்து ரவுடி செல்வம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். காஞ்சீபுரம் அடுத்த மேலை யூர் காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தி.நகரில் வழிப்பறி செய்தபோது சிக்கினார். இவர் மீது பல்வேறு வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மாங்காடு, ஆவடி பகுதி களில் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட கொளுத்துவாஞ்சேரியை சேர்ந்த ரஜினிஸ், மண்ணிவாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

ஜெயலலிதா, சசிகலாவுக்கு எதிரான வருமானவரி வழக்கு 16-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் 1992-93 மற்றும் 1993-94 ஆண்டுகளுக்கான ....»

160x600.gif
160x600.gif