கோடை வெயிலில் கர்ப்பிணிகளை தாக்கும் சின்னம்மை || Pregnant women attack smallpox in the summer season
Logo
சென்னை 28-02-2015 (சனிக்கிழமை)
கோடை வெயிலில் கர்ப்பிணிகளை தாக்கும் சின்னம்மை
கோடை வெயிலில் கர்ப்பிணிகளை தாக்கும் சின்னம்மை


சென்னை நகரில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், கர்ப்பிணிகள் மற்றும் பிறந்த குழந்தைகள் சின்னமையால் அதிகம் பாதிக்கப்படும் நிலையுள்ளது. ‘வரிசெல்லா -சோஸ்டர்’ என்ற வரைஸ் மூலம் சின்னம்மை ஏற்படுகிறது. குறிப்பாக, மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சின்னம்மை தாக்குதல் அதிகம் உள்ளது.

சின்னம்மை தாக்கியவர்களுக்கு மார்பு பகுதியில் சிவப்பு நிற சிறிய கொப்பளங்கள் காணப்படும். பின்னர், மெதுவாக உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவும். காய்ச்சல், தலைவலி இருக்கும். கொப்பளங்களால் ஏற்படும் பாதிப்பு சுமார் ஒரு மாதம் வரை இருக்கும். தும்மல், இருமல் மற்றும் உடலில் ஏற்படும் கொப்பளங்களில் இருந்து வரும் நீர் போன்றவற்றால் சின்னம்மை பரவுகிறது.

சின்னம்மையானது, 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பிறந்த குழந்தையை அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளது. இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சின்னம்மை எளிதில் தாக்குகிறது. கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே சின்னம்மை தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கருக்கலைப்பு செய்வது நல்லது.

இல்லையெனில் கரு வளரும்போது நோய் தாக்கும் ஆபத்து உள்ளது. மேலும், குழந்தைக்கு கண்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். தாய்க்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
amarprakash160600.gif
amarprakash160600.gif