சின்னாளப்பட்டியில் 2 குழந்தைகள் விஷம் கொடுத்து கொலை: தாய் தற்கொலை முயற்சி || chinnalapatti two child dead mother critical position
Logo
சென்னை 23-09-2014 (செவ்வாய்க்கிழமை)
சின்னாளப்பட்டியில் 2 குழந்தைகள் விஷம் கொடுத்து கொலை: தாய் தற்கொலை முயற்சி
சின்னாளப்பட்டியில் 2 குழந்தைகள் விஷம் கொடுத்து கொலை: தாய் தற்கொலை முயற்சி
சின்னாளப்பட்டி, மே 17-
 
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி நாஞ்சில் மனோகரன் காலனியை சேர்ந்தவர் திருலோகசுந்தர் (வயது35). இவரது மனைவி பிரேமா (30). இந்த தம்பதிக்கு கீர்த்தி (7), டானியா (2) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
 
கீர்த்தி அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். திருலோகசுந்தர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்றும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனால் பிரேமா மனவேதனை அடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
 
தான் இறந்த பின்னர் குழந்தைகள் அனாதையாகி விடுமே என எண்ணினார். பின்னர் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று இரவு பிரேமா, குழந்தைகள் கீர்த்தி, டானியா ஆகியோருக்கு விஷத்தை கொடுத்தார். பின்னர் அவரும் குடித்தார். சிறிது நேரத்தில் 3 பேரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
 
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கீர்த்தி, டானியா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். பிரேமா நிலைமை மோசமாக உள்ளது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து சின்னாளப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 குழந்தைகள் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறும் மண்பாதை: கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு தோளில் தூக்கி செல்லும் அவலம்

ஊட்டி, செப். 23–நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அம்மங்காவு அருகே தைத்தல் கடவு, குன்றில் கடவு ....»