அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சொத்து மதிப்பு 80 லட்சம் டாலர் || america president Obama asset increase
Logo
சென்னை 01-09-2015 (செவ்வாய்க்கிழமை)
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சொத்து மதிப்பு 80 லட்சம் டாலர்
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சொத்து மதிப்பு 80 லட்சம் டாலர்
வாஷிங்டன், மே.17-
 
அமெரிக்க அதிபர் ஒபாமா நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் மிச்செல்லியை திருமணம் செய்தபிறகு கடின உழைப்பால் பல மடங்கு முன்னேற்றம் அடைந்தார்.  
 
கடந்த 2000-ம் ஆண்டு ஒபாமா தீவிர அரசியலில் குதித்தார். அப்போது நடந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். இதற்கு மிச்செல் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மனைவியின் பேச்சை மீறி தேர்தல் களத்தில் குதித்தார். அப்போது தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் இழந்தார். இதனால் குடும்பம் வறுமையில் தள்ளாடியது.  
 
ஆனாலும் ஒபாமா ஓயவில்லை. நம்பிக்கையுடன் அரசியல் வானில் தொடர்ந்து பயணம் செய்தார். அவரது விடாமுயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
அமெரிக்க அதிபரான பிறகு அவர் எழுதிய ட்ரீம்ஸ் பிரம் மை பாதர்,  ஆப் தீ ஐசிங், தி அடாசிட்டி ஆப் ஹோப் போன்ற புத்தங்கள் உலகம் முழுவதிலும் அதிக அளவில் விற்பனையாயின. இதன் மூலம் அவரது வருமானம் பல மடங்கு அதிகரித்தது.  
 
இந்த ஆண்டு அவர் தாக்கல் செய்த சொத்து மதிப்பு 80 லட்சம் டாலரை தாண்டி விட்டது. இதில் 10 லட்சம் டாலரை அவர் வாஷிங்டனில் உள்ள ஜே.பி. மோர்கான் சேஸ் வங்கியில் செலுத்தியுள்ளார். அந்த வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக அமெரிக்க புலனாய்வுதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
இதுபற்றி ஒபாமா கூறும்போது, அமெரிக்காவில் உள்ள தலை சிறந்த வங்கிகளில் ஜே.பி. மோர்கான் சேஸ் வங்கியும் ஒன்று. இதனால்தான் அந்த வங்கியில் எனது பணத்தை போட்டு வைத்துள்ளேன் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

முறையான தூக்கமின்மை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் குறைக்கும்!

தூக்கம் நமது உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக பல்வேறு ஆராய்ச்சிகளும் அவ்வப்போது பரிந்துரைத்துக் கொண்டே ....»