தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வரப்படவேண்டும்: அஜய் மக்கான் || IPL and BCCI should be away from each other Ajay Maken
Logo
சென்னை 28-08-2015 (வெள்ளிக்கிழமை)
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வரப்படவேண்டும்: அஜய் மக்கான்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வரப்படவேண்டும்: அஜய் மக்கான்
புதுடெல்லி, மே. 15 -
 
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் உள்ளூர் வீரர்கள் 5 பேர் `ஸ்பாட் பிக்சிங்' எனும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை தனியார் டெலிவிசன் சேனல் ஒன்று புலனாய்வு செய்து கண்டுபிடித்து செய்தி வெளியிட்டது. இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 5 வீரர்களையும் 15 நாள் இடைநீக்கம் செய்வதாக நேற்று மாலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
 
இதுகுறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் கூறியதாவது; சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் அந்த ஐந்து வீரர்களை இடை நீக்கம் செய்ததால் மட்டும் போதாது. இந்த விவாகரத்திற்கு யார் மூலகாரணம்? இந்த சூதாட்ட விவகாரத்திற்கு காரணமானவர்கள் அனைவரையும் கண்டுபிடிக்க வேண்டும்?
 
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவேண்டும். அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் ஐபிஎல் வாரியமும் தனித்து செயல்படவேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
உலகிலுள்ள கிரிக்கெட் வாரியங்களில் அதிகளவு பணம் கொழிக்கும் வாரியம் ஒன்று உண்டென்றால் அது இந்திய கிரிக்கெட் வாரியம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி: தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் ....»

amarprash.gif