அரை இறுதி வாய்ப்பில் சென்னை அணி நீடிக்குமா? பஞ்சாப் அணியுடன் நாளை பலப்பரீட்சை || chennai super kings kings eleven punjab IPL Cricket
Logo
சென்னை 05-10-2015 (திங்கட்கிழமை)
அரை இறுதி வாய்ப்பில் சென்னை அணி நீடிக்குமா? பஞ்சாப் அணியுடன் நாளை பலப்பரீட்சை
அரை இறுதி வாய்ப்பில் சென்னை அணி நீடிக்குமா? பஞ்சாப் அணியுடன் நாளை பலப்பரீட்சை
தர்மசாலா, மே. 16-

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி 'லீக்' ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை நாளை (வியாழக்கிழமை) சந்திக்கிறது. இந்த ஆட்டம் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் மாலை 4 மணிக்கு நடக்கிறது.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ஆட்டத்தில் விளையாடி 8 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 17 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

சென்னை அணி அரை இறுதிக்கான (பிளேஆப்) வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் நாளைய போட்டியிலும் வெற்றி பெறவேண்டும். மும்பை அணியிடம் கடைசி பந்தில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு சென்னை அணிக்கு தான் மோதும் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெறவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.

அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா அணிகளை தொடர்ச்சியாக வென்றது. அதேபோல பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றி பெறவேண்டும். 19 புள்ளிகளை தொட்டால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் இருக்க முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து வெற்றிபெற அல்பி மார்கல், அணிருதா ஸ்ரீகாந்த், மைக் ஹஸ்ஸி, முரளி விஜய், கேப்டன் டோனி, பிராவோ ஆகியோரது பங்கு முக்கியமாக இருந்தது. கொல்கத்தாவுக்கு எதிராக பிராவோ கடைசி பந்தில் சிக்சர் அடித்து சென்னை அணிக்கு வாழ்வு கொடுத்தார்.

இதேபோன்று மற்றொரு அதிரடியான ஆட்டத்தையும் பஞ்சாப் அணிக்கு எதிராக வெளிப்படுத்த வேண்டும். 2010-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக இதே தர்மசாலாவில் நடந்த நெருக்கடியான போட்டியில் டோனி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்.

பஞ்சாப் அணி 14 ஆட்டத்தில் 7 வெற்றி, 7 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. சென்னைக்கு எதிராக தோல்வி அடையும் பட்சத்தில் அந்த அணி வெளியேற்றப்படும்.

மொத்தம் உள்ள 72 ஆட்டத்தில் நேற்றுடன் 64 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் 8 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. டெல்லி அணி மட்டுமே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்னும் 3 அணிகள் தகுதி பெறவேண்டும். மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 6 அணிகளில் இருந்து 3 அணி தகுதி பெறும்.

மும்பை-கொல்கத்தா இடையே இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை வென்றால் தகுதி பெற்றுவிடும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங்குக்கு 29–ந்தேதி திருமணம்

மும்பை, அக். 5–இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங். 35 வயதான இவர் தனது ....»

VanniarMatrimony_300x100px_2.gif