ஐபிஎல் போட்டி: டெல்லி டேர்டெவில்ஸ் வெற்றி || Punjob vesus Delhi in IPL season 5
Logo
சென்னை 07-07-2015 (செவ்வாய்க்கிழமை)
ஐபிஎல் போட்டி: டெல்லி டேர்டெவில்ஸ் வெற்றி
ஐபிஎல் போட்டி: டெல்லி டேர்டெவில்ஸ் வெற்றி
புதுடெல்லி, மே. 15 -  
ஐ.பி.எல் போட்டித் தொடரின் 64-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் துவங்கியது. இந்த ஆட்டத்தில் ஷேவாக் தலைமையிலான டெல்லி டேர் டெவில்ஸ் அணியும், டேவிட் ஹஸ்ஸி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.  
 
டெல்லி அணி இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்வி என்ற நிலையில் 18 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. பஞ்சாப் அணி இதுவரை தான் மோதிய 13 ஆட்டங்களில் 7 வெற்றி, 3 தோல்வியுடன் ஏழாம் இடத்தில் இருந்தது.  
 
டெல்லி அணியில் கடந்த ஆட்டத்தில் விளையாடிய வாண்டெர் மெர்வ், நாகர் ஆகியோர் நீக்கப்பட்டு ராஸ் டெய்லர்,  பவன் நேகி ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
 
பஞ்சாப் அணியில் கடந்த ஆட்டத்தில் விளையாடிய ஹாரிஸ், சிட்னிஸ் ஆகியோர் நீக்கப்பட்டு டேவிட் மில்லர், ஹர்மீத் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.    
 
டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக மன்தீப் சிங்கும் ஷான் மார்ஷும் களமிறங்கினர்.  
 
மன்தீப் 21 ரன்கள் எடுத்த நிலையிலும் ஷான் மார்ஷ் 13 ரன்கள் எடுத்திருந்த போதும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த நிதின் சைனி 15 ரன்களிலும், டேவிட் மில்லர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.   
 
பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு  விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது.
 
இதைத்தொடர்ந்து விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 6 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. இதனால் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.  
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஜிம்பாப்வே போட்டி தொடரை வெல்வோம்: கேப்டன் ரஹானே நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணி, இன்று முதல் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் இரண்டு ....»