திருவட்டார் அருகே 17 வயது வாலிபரை கடத்தி சென்றதாக இளம் பெண் மீது புகார் || 17 year old youth was going to kidnap a young girl near tiruvattar
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
திருவட்டார் அருகே 17 வயது வாலிபரை கடத்தி சென்றதாக இளம் பெண் மீது புகார்
திருவட்டார் அருகே 17 வயது வாலிபரை கடத்தி சென்றதாக இளம் பெண் மீது புகார்
திருவட்டார், மே.15-
 
திருவட்டாரை அடுத்த முதலார் ஒடவிளையை சேர்ந்தவர் ரவி (வயது 29). கட்டிட தொழிலாளி. ரவியின் மனைவி விஜி (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரவியின் வீடு அருகே வசிப்பவர் வினுயேஸ்(17). இவரும் கட்டிட வேலைக்கு செல்வார். இதனால் இவருக்கு ரவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
 
இதில் ரவியின் மனைவி விஜியும், வினுயேசுடன் பேசுவார். நாளடைவில் வினுயேஸ், விஜி வீட்டுக்கு அடிக்கடி செல்லத் தொடங்கினார். இதில் இருவருக்குமிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.   விஜியுடன், வினுயேஸ் தவறான முறையில் பழகுவதை அறிந்த ரவி மனைவியை கண்டித்தார். மேலும் வினுயேசுடன் பேசக்கூடாது என்றும் தடை விதித்தார்.
 
இது விஜிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர் கணவனின் எச்சரிக்கையை மீறி வினுயேசுடன் பழகி வந்தார். நேற்று முன்தினம் ரவி வெளியே சென்றிருந்த போது விஜி வீட்டில் இருந்த 6 1/2 பவுன் நகை மற்றும் ரொக்கப் பணம் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு மாயமாகி விட்டார்.
 
மாலையில் வீட்டுக்கு வந்த ரவி மனைவியை காணாது அங்குமிங்கும் தேடினார். எங்கு தேடியும் அவரை கண்டு பிடிக்கமுடியவில்லை. அப்போது தான் பக்கத்து வீட்டில் வசித்த வினுயேசும் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. 
 
இதையடுத்து விஜி வாலிபர் வினுயேசுடன் ஓட்டம் பிடித்திருக்கலாம் என்று கருதிய ரவி இதுபற்றி திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதில் மனைவி தன்னையும், 2 குழந்தைகளையும் தவிக்க விட்டு பக்கத்து வீட்டு வாலிபருடன் ஓடியிருக்கலாம் என்றும், அவர்களை கண்டு பிடித்து மனைவியை மீட்டுத் தர வேண்டும் என்றும் கூறி இருந்தார். 
 
இதற்கிடையே வினுயேசின் தந்தை விஜயன் தனது மகனை காணவில்லை என திருவட்டார் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், கட்டிட வேலை பார்த்து வந்த மகன் வினுயேசுக்கு விஜி என்ற விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் பழக்கம் இருந்தது.
 
நேற்று முன்தினம் எனது மகன் வினுயேஸ் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். அவரிடம் ரூ.2 ஆயிரம் பணமும் இருந்தது. அன்று மாலை அவர் வேலை முடிந்து வீட்டுக்கு வரவில்லை. விசாரித்து பார்த்த போது எனது மகனை விஜி என்ற விஜயலட்சுமி கடத்தி சென்று விட்டது தெரிய வந்தது. எனவே எனது மகனை மீட்டு தர வேண்டும் என்று புகார் மனுவில் கூறி இருந்தார்.
 
 விஜியின் கணவர் ரவி மற்றும் வினுயேசின் தந்தை விஜயன் ஆகிய இருவரும் கொடுத்த புகார்களின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான விஜி மற்றும் வினுயேசை தேடி வருகிறார்கள்.
  
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - கன்னியாகுமரி

section1

பாலக்காடு அருகே குளத்தில் தேங்காய் எடுக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலி

கொழிஞ்சாம்பாறை,பிப்.12–கேரள மாநிலம் பாலக்காடு சொர்னூர் கொலப்பள்ளியை சேர்ந்தவர் ராகவன்நாயர் (வயது 83). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif