குழந்தை பாக்கியம் தரும் விரதம் || child give vratham
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
குழந்தை பாக்கியம் தரும் விரதம்
குழந்தை பாக்கியம் தரும் விரதம்


குருபார்க்க கோடி நன்மை என்பார்கள். ஒருவரின் ஜாதகத்தில் குருபலம் இருந்தால் தான் திருமண யோகம், மழலைச் செல்வம், தனலாபம், நல்ல புத்தி, அந்தஸ்து அனைத்தும் உண்டாகும். இட பலத்தைக் காட்டிலும் பார்வை பலத்தால் அதிக நன்மைகளை வாரி வழங்கக்கூடியவர் இவர். ஜோதிடப்படி நவக்கிரகங்களில் ஐந்தாம் இடத்தை வகிக்கிறார்.

சனி, கேது, ராகு போன்ற தீய கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்கள் குருவின் பார்வையால் நீங்கும். ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றாலும், குரு ஆட்சி பெற்றாலும் தர்ம சிந்தனை, ஒழுக்கம், நீதிநெறி தவறாமை ஆகிய நற்குணங்கள் உண்டாகும். மேஷ வீட்டில் குரு நட்பு பலம் பெறுகிறார்.

நீண்ட நாளாக குழந்தை இல்லாமல் வாடும் தம்பதியர் வியாழக்கிழமையில் விரதம் இருக்க குருபகவானின் அருளால் விரைவில் பிள்ளைவரம் கிடைக்கும். மழலை வேண்டி விரதம் இருப்போர் வியாழக்கிழமைகளில் குருவுக்கு நெய்தீபம் ஏற்றுவது மிகச்சிறந்த பரிகாரமாகும்.
Newbharath.gif