நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 மாத குழந்தை பலி: சாவு எண்ணிக்கை 16 ஆக உயர்வு || Nellai district Dengue fever child dead
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 மாத குழந்தை பலி: சாவு எண்ணிக்கை 16 ஆக உயர்வு
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 மாத குழந்தை பலி: சாவு எண்ணிக்கை 16 ஆக உயர்வு
நெல்லை, மே. 13-
 
நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், வடகரை, சுரண்டை, தென்காசி, கடையம், பாவூர்சத்திரம், முக்கூடல் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
 
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார குழுவினர் முடுக்கி விடப்பட்டு உள்ளனர். சிறப்பு முகாம் நடத்தியும், வீடு வீடாக கொசு மருந்து தெளித்தும் கட்டுப்படுத்தி வருகிறார்கள்.
 
டெங்கு காய்ச்சலுக்கு நேற்று வரை 14 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
பாளை அரசு ஆஸ்பத்திரியில் 70-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று தென்காசி அரசு மருத்துவமனையில் இருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
 
இதில் வடகரையை சேர்ந்த அசன் மைதீன் (58) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த நிலையில் முக்கூடல் அருகே உள்ள உடையாம்புளி, ஓடைமறிச்சான் பகுதியிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி உள்ளது. ஓடைமறிச்சானை சேர்ந்த உதயகுமார் என்பவரின் 5 மாத குழந்தை முகிலா நேற்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி முகிலா பரிதாபமாக இறந்தாள்.
 
இதனால் நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
 
மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மீரான் மைதீன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அய்யனார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு குழுக்கள் அமைத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - திருநெல்வேலி

section1

நெல்லையில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.3 லட்சம் கொள்ளை

நெல்லை, நவ. 28–நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை நாடார் தெருவை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 74). இவர் ....»