பெரம்பலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி: கலெக்டர் அழைப்பு || free training to group iv examinations in perambalur collector invite
Logo
சென்னை 14-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
பெரம்பலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி: கலெக்டர் அழைப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி: கலெக்டர் அழைப்பு
பெரம்பலூர், மே.12-
 
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-4 தேர்வுக்கு மாவட்ட நிர்வாகத்தால் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன என்று கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  
 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் அதிக அளவில் தேர்வு பெறாத நிலை உள்ளது.இந்தநிலையை மாற்றும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி 4-ல் அடங்கிய பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு எழுதும் பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
 
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமுடையவர்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (12-ந் தேதி) முதல் 15-ந் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 
முன்பதிவிற்காக கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் 3 கணினி அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கென 3 கணினி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
 
முன்பதிவு செய்தவர்களுக்கு 17-ந் தேதி இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள எழுத்து தேர்வு நடத்தப்படும். இந்த எழுத்து தேர்வு பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் 17-ந் தேதி காலை 10 மணிக்கு நடத்தப்படும்.
 
தகுதித்தேர்வு எழுதுபவர்கள் தேர்விற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறை விவரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம், பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடம், நேரம் குறித்த தகவல்கள் கலெக்டர் அலுவலகம், பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலகம், பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகங்கள், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய ஊராட்சி
ஒன்றிய அலுவலகங்களிலும் உள்ள விளம்பர பலகையில் ஒட்டப்படும்.
 
இதனை பார்த்து தங்கள் தேர்ச்சி மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடத்தினையும், நேரத்தினையும் தெரிந்து கொள்ளலாம்.தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பல்வேறு அணிகளாக பிரிக்கப்பட்டு தனித்தனி அலுவலர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
 
இது குறித்து மேலும் விவரம் அறிந்து கொள்ள 94450 43119 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - பெரம்பலூர்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif