இளைஞர் காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: முத்துப்பேட்டை இளைஞர் காங்.கூட்டத்தில் தீர்மானம் || youth congress more candidate join
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
இளைஞர் காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: முத்துப்பேட்டை இளைஞர் காங்.கூட்டத்தில் தீர்மானம்
இளைஞர் காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: முத்துப்பேட்டை இளைஞர் காங்.கூட்டத்தில் தீர்மானம்
முத்துப்பேட்டை,மே.12-
 
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் சார்பில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட முன்னாள் தலைவர் தெட்சிணா மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
 
ஒன்றிய கவுன்சிலரும், சட்ட மன்ற இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவருமான ஆர்.வி.காமராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி.சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர் மெட்ரோ மாலிக் வரவேற்று பேசினார்.
 
கூட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலா ளர் நாச்சிகுளம் தாஹீர், வட்டார நிர்வாகி சந்திரசேகர், பாலை நாகராஜன், வர்த்தக காங்கிரஸ் வட்டார தலைவர் வடுகநாதன், சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகைதீன் பிச்சை, சட்டமன்ற பிரதிநிதி மதியரசு, கோட்டூர் வட்டார தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் சுந்தர ராமன், மூத்த தலைவர் பண்டரிநாதன், மாவட்ட செயற்குழு உப்பூர் ரவிசேகரன், சட்டமன்ற பிரதிநிதி பாஸ்கர், மாவட்ட துணைத்தலைவர் நா.ஜீவானந்தம் உள்பட பலரும் பேசினார்கள்.
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:-
 
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதிகளில் சென்றமுறையை விட இந்த முறை அதிக அளவில் இளைஞர் காங்கிரசுக்கு உறுப்பினர் சேர்க்க பாடுபடுவது. ஜாம்புவானோடை வெள்ளாதிக்காட்டில் ஏற்பட்ட பிரச்சினையில் முத்துப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஒரு தலைபட்சமான நட வடிக்கையை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்மென்றும் உடன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் வரும் 25-ந்தேதி அன்று முத்துப் பேட்டையில் கண்டன உண்ணாவிரதம் நடத்துவது.
 
100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் குளறு படிகளையும், ஊழல் களையும் களைந்து ரூ.119 முழு சம்பளத்தையும் பயனாளிக்கு வழங்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறது. வருகிற 21-ந்தேதி ராஜீவ் காந்தியின் நினைவு நாளை வன்முறை எதிர்ப்பு நாளாக கடைபிடிப்பது. முத்துப்பேட்டையில் இயங்கி வந்த 108 ஆம்புலன்ஸ் திடீரென நிறுத்தப்பட்டது. உடனடியாக பழையபடி 108 ஆம்புலன்ஸை இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - திருவாரூர்

section1

திருத்துறைப்பூண்டி அருகே ஊராட்சி பெண் கவுன்சிலர் தீக்குளிப்பு: வாலிபர் கைது

திருத்துறைப்பூண்டி, பிப்.12–திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்புண்டி அருகே உள்ள பாமணி ஊராட்சி 2–வது வார்டு உறுப்பினராக இருப்பவர் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif