பட்டாசு தயாரித்த போது விபத்து: தொழிலாளி உடல் கருகியது || fire production employee injury
Logo
சென்னை 22-10-2014 (புதன்கிழமை)
பட்டாசு தயாரித்த போது விபத்து: தொழிலாளி உடல் கருகியது
பட்டாசு தயாரித்த போது விபத்து:  தொழிலாளி உடல் கருகியது
வலங்கைமான்,மே.12-
 
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதிகளில் அரசு அனுமதியோடு சில இடங்களில் திருவிழாவிற்கு பயன்படுத்தப்படும் ராக்கெட்டுகள், புஸ்வாணங்கள் மற்றும் வெடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
 
வலங்கைமான் சுற்று வட்டார கிராமங்களில் தற்போது சித்திரை திருவிழாக்கள் நடைப்பெற்று வருகிறது. அதனை முன்னிட்டு அதற்கு தேவையான புஸ்வானங்கள் மற்றும் வாணங்கள் தயார் செய்யும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வலங்கைமான் வடக்கு அக்ரஹாரத்தை சேர்ந்த ராஜா மனைவி வினோதினிக்கு சொந்தமான வாணம் உற்பத்தி செய்யும் குடோன் குடமுருட்டி ஆற்றங்கரை அருகில் உள்ளது.
 
நேற்று மாலை இந்த குடோனில் திருவிழாவிற்கு சாமி ஊர்வலத்தின் போது பயன்படுத்தப்படும் புஸ்வானத்தை மேலவிடையல் ஊராட்சி ஆண்டாங்கோவில் பெரியார் காலணியை சேர்ந்த செல்வம் (42) தயார் செய்து கொண்டிருந்தார். அவர் மண் குடுவையில் வெடி மருந்தினை நிரப்பி ஒரு சிறிய குச்சியின் மூலம் மருந்தினை இறுக செய்தபோது எதிரபாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் செல்வம் படுகாயம் அடைந்தார்.
 
மேலும் கட்டிடத்தின் சிமெண்ட் சீட்டினால் ஆன மேற்கூரை வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு அருகில் செங்கல் சூளை மற்றும் பருத்தி வயல்களில் வேலை செய்தவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த செல்வத்தினை 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடோன் வெடித்த நேரத்தில் அங்கு இருந்த கடிகாரம் ஓடாமல் நின்றது. வலங்கைமான் பட்டாசு குடோனில் பட்டாசு வெடித்தது பற்றிய தகவல் கிடைத்த தும்தீயனைப்புத்துறை நிலைய அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
 
சம்பவ இடத்திற்கு திருவாரூர் கோட்டாச்சியர் (பொறுப்பு) துரைபாண்டியன், தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார்கிரி, டி.எஸ்.பி சிவபாஸ்கர், தாசில்தார் சுகுமாறன், வருவாய் ஆய் வாளர் தனசேகரன், கிராம நிர்வாக அதிகாரி ராமலிங்கம் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருவாரூர்

Maalaimalar.gif
Maalaimalar.gif