கூடலூரில் ஒரே குடும்பத்தில் 3 பேரை கொன்றவர் விஷம் குடித்தார்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை || man drank poison after killed three person treatment in hospital
Logo
சென்னை 03-08-2015 (திங்கட்கிழமை)
கூடலூரில் ஒரே குடும்பத்தில் 3 பேரை கொன்றவர் விஷம் குடித்தார்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
கூடலூரில் ஒரே குடும்பத்தில் 3 பேரை கொன்றவர் விஷம் குடித்தார்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
கூடலூர், மே. 12-
 
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள மண்மேடு பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது55). இவரது தம்பி பாலச்சந்திரன்(53). இவர்கள் 2 பேரும் தங்கள் குடும்பத்தினருடன் அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.
 
இந்த நிலையில் 2 குடும்பத்தினருக்கும் இடையே குப்பை கொட்டும் பிரச்சினையில் தகராறு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆத்திரம் அடைந்த வேணுகோபாலின் மகன் திபு (17) தனது சித்தப்பா மனைவி ராதாமணி, அவரது மகள் ரம்யா, மகன் விசு ஆகியோரை சரமாரியாக வெட்டிக் கொன்றார்.
 
இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதி நடந்தது. இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட திபு தற்போது சிறையில் உள்ளார்.   இந்த சம்பவத்தை தொடர்ந்து வேணு கோபாலுக்கும் பாலச் சந்திரனுக்கும் இடையே விரோதம் அதிகரித்தது.
 
தனது குடும்பத்தை நிர்மூலமாக்கிய அண்ணன் குடும்பத்தை பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று பாலச்சந்திரன் தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.
 
இந்த நிலையில் வேணு கோபால் நேற்று இரவு 7 மணியளவில் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேணுகோபாலை சரமாரியாக குத்தினார்.இதில் சம்பவ இடத்திலேயே வேணுகோபால் பரிதாபமாக இறந்தார்.
 
அதன் பிறகும் பாலச்சந்திரனின் ஆத்திரம் தீரவில்லை. வேணுகோபால் வீட்டிற்கு சென்ற அவர் அங்கிருந்த வேணுகோபாலின் மனைவி சுமதி, மகன் பிரதீப் ஆகியோரையும் குத்திக் கொலை செய்தார்.இதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். இது குறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு லட்சுமணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் பாலச்சந்திரன் அங்கிருந்து தப்பி அருகில் உள்ள பள்ளி வளாகத்துக்கு சென்று விஷம் குடித்தார்.அதற்குள் போலீசார் பாலச்சந்திரனை தேடி அங்கு வந்தனர்.  
 
விஷம் குடித்து மயங்கி கிடந்த பாலச்சந்திரனை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
கொலையாளியான பாலச்சந்திரனின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது பாலச்சந்திரன் எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில்,எனது குடும்பத்தை அழித்தவர்களை நான் கொலை செய்யாமல் விடமாட்டேன்.கொலை செய்துவிட்டு மனைவி, குழந்தையிடம் நானும் சென்று விடுவேன் என்று பாலச்சந்திரன் எழுதி இருந்தார். அண்ணன் குடும்பத்தினர் 3 பேரை கொன்று தம்பி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

தண்ணீரில் மூழ்கி பலியான 2 மாணவர்களின் கண்கள் தானம்

திருமங்கலம், ஆக. 3–மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ....»

MM-TRC-B.gif