சென்னை நட்சத்திர ஓட்டலில் சினேகா பிரசன்னா திருமண வரவேற்பு: நடிகர், நடிகைகளுக்கு விருந்து || sneha prasanna marriage reception in chennai hotel
Logo
சென்னை 27-05-2015 (புதன்கிழமை)
சென்னை நட்சத்திர ஓட்டலில் சினேகா- பிரசன்னா திருமண வரவேற்பு: நடிகர், நடிகைகளுக்கு விருந்து
நடிகை சினேகா-பிரசன்னா திருமணம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நேற்று நடந்தது. நடிகர், நடிகைகள், உறவினர்கள் நேரில் வாழ்த்தினர்.
 
சினேகாவுக்கு பிரசன்னா நாயுடு முறைப்படியும், பிராமணர் முறைப்படியும் இரண்டு தடவை தாலி கட்டினார். நடிகர், நடிகைகளுக்காக பிரத்யேகமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
 
இந்த திருமண வரவேற்பு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று மாலை நடக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாள நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு உயர்தர விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
 
திருமணத்துக்கு வராத நட்சத்திரங்கள் பலரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்துகிறார்கள்.
 
தேனிலவுக்காக சினேகாவும், பிரசன்னாவும் ஓரிரு தினங்களில் வெளிநாடு புறப்படுகின்றனர். எந்த நாட்டுக்கு போகிறார்கள் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். சினேகா தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா? அல்லது முழுக்குப் போடுவாரா? என்று திரையுலகில் பரபரப்பான பேச்சு உள்ளது.
 
சினேகா விரும்பினால் சினிமாவில் நடிக்கலாம் என்று பிரசன்னா கூறியிருந்தார்.ஆனால் சினேகா நடிக்க மாட்டார் என்றே தெரிகிறது. தேனிலவுக்கு சென்று திரும்பியதும் தனது முடிவை அறிவிக்கிறார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சினிமா செய்திகள்

section1

கல்லூரியில் சேரும் லட்சுமிமேனன்

தமிழில் கும்கி, படத்தில் நடித்து லட்சுமி மேனன் பிரபலமானார். விஷால், சசிகுமார், கார்த்தி, விமல் படங்களில் ....»

தொடர்புடைய கேலரி
சினேகா
சினேகா- பிரசன்னா திருமணம்
சினேகா- பிரசன்னா திருமணம்
சினேகா-பிரசன்னா திருமணவரவேற்பு
சினேகா-பிரசன்னா திருமணவரவேற்பு
தொடர்புடைய வீடியோ
சினேகா- பிரசன்னா திருமணம்