தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கைதான பெண் ஊழியர் சென்னை போலீசில் ஒப்படைப்பு || bomb threat to jayalalitha madurai meenatchi amman temple
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கைதான பெண் ஊழியர் சென்னை போலீசில் ஒப்படைப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கைதான பெண் ஊழியர் சென்னை போலீசில் ஒப்படைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர், மே. 12-
 
தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த புதன்கிழமை ஈ மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகியவற்றை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாகவும், முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்றும் ஈ மெயிலில் குறிப்பிட்டிருந்தது.
 
இந்த மிரட்டலை தொடர்ந்து அன்று நள்ளிரவு கோவில்களில் போலீசார் சோதனை நடத்தினர். வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. பின்னர் இது புரளி என்பது தெரியவந்தது. இந்த ஈமெயில் மிரட்டல் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.   விசாரணையில் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இருந்து அனுப்பப்பட்டது தெரியவந்தது.
 
நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சக்திவேல் மற்றும் போலீசார் பல்கலைக்கழகத்தில் சோதனை மேற்கொண்டனர். பல்கலைக்கழகத்தில் நிர்வாக பிரிவில் பணிபுரியும் சுந்தரபாண்டியம் கிராமத்தை சேர்ந்த நாச்சிமுத்து மனைவி வசந்தா (வயது24) என்பவர் இந்த ஈமெயிலை அனுப்பியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ஈமெயில் அனுப்ப அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர். நேற்று இரவு வசந்தாவை போலீசார் கைது செய்தனர்.
 
அவர் மீது 506, 507, 124 ஏ, 153 ஏ ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட வசந்தாவை ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். வசந்தாவுக்கும் நாச்சி முத்துவுக்கும் கடந்த 2010 ஆண்டு திருமணம் நடந்துள்ளது. பின்னர் அவர்கள் மும்பை, தானே பகுதிக்கு சென்றனர். அங்கு நாச்சிமுத்து மருத்துவ பிரதி நிதியாக வேலை பார்த்து வந்தார். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் வசந்தாவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையை கணவர் பார்க்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த வசந்தா கணவரை பிரிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் வேலைக்கு சேர்ந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து வசந்தா வாழ்கிறார். எனவே கணவரை பிரச்சினையில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டதாக வசந்தா போலீசாரிடம் கூறியுள்ளார்.
 
கைதான வசந்தாவிடம் சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அவர்களிடம் வசந்தாவை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் ஒப்படைக்கிறார்கள். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விருதுநகர்

section1

ராஜபாளையம் அருகே கடையில் செல்போன் திருடியவர் சிக்கினார்

ராஜபாளையம், பிப். 12–ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் வன்னியராஜா. இவர் வீட்டு ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif