கூடங்குளத்தில் காலவரையற்ற உண்ணாவிரதமிருந்த அனைத்து பெண்களும் திடீர் விலகல்: உதயகுமார் அவசர ஆலோசனை || kudankulam udayakumar discuss demonstration womens avoid
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
கூடங்குளத்தில் காலவரையற்ற உண்ணாவிரதமிருந்த அனைத்து பெண்களும் திடீர் விலகல்: உதயகுமார் அவசர ஆலோசனை
கூடங்குளத்தில் காலவரையற்ற உண்ணாவிரதமிருந்த  அனைத்து பெண்களும் திடீர் விலகல்: உதயகுமார் அவசர ஆலோசனை
வள்ளியூர், மே.11-

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அணுஉலை எதிர்ப்பாளர் களும், பொதுமக்களும் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதபோராட்டம் நடத்திவரும் நிலையில்,  போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்ளிட்டோர் கடந்த 1-ந்தேதி முதல் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

போராட்டம் ஒருபுறம் தீவிரமாக நடந்துவரும் அதேவேளையில், கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மின்உற் பத்தி தொடங்குவதற்கான பணிகள் மின்னல் வேகத்தில் நடந்துவருகிறது. இந்த மாத இறுதிக்குள் மின் உற்பத்தியை தொடங்கிவிடவேண்டும் என்ற முனைப்பில் பணிகள் மிகவும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தொடர் போராட்டம் நடத்திவரும் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வராததால் மத்திய-மாநில அரசுகள் இதுவரை கண்டிராத அளவுக்கு ஆயிரக்கணக்கானோரை திரட்டி 10-ந்தேதி (அதாவது நேற்று) மிகப்பெரியஅளவில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.

போராட்டக்குழுவினரின் இந்த அறிவிப்பால் கூடங்குளத்தில் பிரச்சினை எதுவும் ஏற்படலாம் என்று கருதப்பட்டது. இதனால் கூடங்குளம் அணுமின்நிலையத்தின் 2கிலோமீட்டர் சுற்றளவுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடையை, 7கிலோமீட்டர் தூரமாக அதிகரித்து நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் உத்தரவிட்டார்.

மேலும் வருகிற 31-ந்தேதிவரை இருந்த 144தடை, அடுத்தமாதம் 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி போராட்டக்காரர்கள் தடையை மீறாமல் இருப்பதற்காக கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் வெளியூரை சேர்ந்தவர்கள் கூடங்குளம் மற்றும் இடிந்தகரை பகுதிக்குள் நுழைய முடியாதபடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் போராட்டக்காரர்கள் அறிவித்தபடி மிகப்பெரிய போராட்டம் நடத்துவற்காக ஆயிரக் கணக்கானோரை இடிந்தகரையில் திரட்ட முடியவில்லை.

ஆகையால் என்ன செய்வதென்று போராட்டக்குழு நேற்று காலை  அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றிலும் 7கிலோமீட்டர் சுற்றளவிற்கு 144தடை விதிக்கப்பட்டதால், அதனை கண்டிக்கும் விதமாக அந்தந்த கிராமங்களில பொதுமக்களை போராட்டத்தில் ஈடுபடச்செய்ய அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

போராட்டக் குழுவினரின் இந்த முடிவு கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூடங்குளம், கூத்தங்குளி, உவரி, கூட்டப்பனை, கூடு தாழை, தொம்மையார்புரம் ஆகிய 9 கிராமங்களில் உண்ணாவிரதம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அதே நேரத்தில் இடிந்தகரையில் நடந்துவந்த காலவரையற்ற உண்ணாவிரமும் தொடர்ந்தது. இந்நிலையில் இடிந்த கரையில் நடந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் போராட்டத்திலிருந்து இன்று திடீரெனவிலகினர்.

உண்ணாவிரதம் இருந்து வந்த 302 பெண்களில் யாரும், இன்று இடிந்தகரையில் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வரவில்லை. ஆகையால் சுமார் 25ஆட்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். பெண்களின் இந்த முடிவிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

இருந்த போதிலும் நேற்று இரவு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவே பெண்கள் இந்த அதிரடி முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.       தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தும், நமது போராட்டத்திற்கு இதுவரை தீர்வு கிடைக்காததால் வேறுவிதமாக போராட்டம் நடத்தலாம் என்று போராட்டக்குழுவை சேர்ந்த ஒரு தரப்பினர் கருத்து கூறியதாக தெரிகிறது.

இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்புதெரிவித்து, தற்போதைய போராட்டத்தையே தொடரலாம் என்று கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. இதில் உடன்பாடு இல்லாததால் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்த 302 பெண்களும் போராட்டத்தை புறக்கணித்துள்ளனர். இதேபோல் 144 தடை உத்தரவு எல்கையை அதிகரித்ததை கண்டித்து கூடங்குளம் உள்ளிட்ட 9கிராமங்களில் நேற்று தொடங்கிய உண்ணா விரத போராட்டமும் இன்று நடக்கவில்லை.

நேற்றைய போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடவில்லை. உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் திடீரென பின்வாங்கியதாலும், 9கிராமங்களில் உண்ணா விரதம் இருந்த மக்கள் அந்த போராட்டத்தை கைவிட்டிருப்பதாலும் உதயகுமார் உள்ளிட்ட போராட்டக்குழுவினர அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர் இதுதொடர்பாக போராட்டக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களும், கிராமமக்களும் திடீரென பின் வாங்கியிருப்பதால் கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.            
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - திருநெல்வேலி

section1

கடையம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கத்திக்குத்து

நெல்லை, நவ. 27–கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த அர்ஷத் மஜித் (வயது22). ரிசோ (21) ஆகியோர் ....»